ஜாதியை நியாயப்படுத்தி குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

ஜாதியை நியாயப்படுத்தி குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

சென்னை, செப். 29- ஜாதி சரி என்று கூறி ஒரு குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் என்று திமுக மக்களவைக் குழுத் துணைத்தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் “குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைத் திருமணங் களை தடுத்தல், இளைஞர் பரிந்துரைஞர்களை ஊக்குவித்தல்” என்ற  தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை, தோழமை அமைப்பு, அய்க்கிய நாடுகள் அவையின் குழந் தைகளுக்கான அமைப்பு உள்ளிட் டோர் இணைந்து நடத்தினர். 

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசுகையில், 

சமூக நீதி என்று பேசும்போது ஆண்,  பெண் சமமாகப் பார்க்கப்பட வேண்டும். ஜாதி - மதம் என பிறப்பால் உருவாகும் பாகுபாடுகள் இருக்கக் கூடாது. சுயமரியாதையோடு கூடிய சமூகத்தை இயக்க வேண்டும் என்பது தான் சமூக நீதி. இதில் குழந்தைகளை சேர்ப்பதில்லை. வயதின் அடிப் படையில் இந்த பாகுபாடு ஏற்படுகிறது. ஒருவர் நமக்கு பிறகு பிறப்பதால் உரிமை மறுக்கப்படுவதை கவனத்தில் கொள்வ தில்லை.

முன்பெல்லாம், அம்மா - அப்பா சவுக்கால், பெல்ட்டால் அடிப்பார்கள் என்று சர்வ சாதாரணமாக சொல்லும் காலம் இருந்தது. ஆசிரியர்கள் அடிக்கவில்லை என்றால் சரியான ஆசிரியர் இல்லை என்று சொன்ன காலம் இருந்தது. இப்போது அது  மாறியுள்ளது. 

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அதிகம்அலைபேசி பயன்படுத்தப்படுவதுதான் காரணம் என தொழில் நுட்ப வளர்ச்சி மீது பழி போடுகிறோம். இப்போதுதான் இதுபோன்ற  வன்முறை குறித்து பேச ஆரம்பித்துள்ளோம். ஓர் அறையில் உள்ள 10 பேரில் குறைந்தது 5  பேராவது ஏதேனும் ஒரு வன்முறைக்கு ஆளாகிறார்கள். அது  அவர்கள் வாழ்நாள் முழுதும் உள்ளது. சட்டங்கள் கடுமையாக உள்ளபோது யாரும் புகார் அளிக்கவே முன்வர மாட்டார்கள். இருக்கும் சட்டங்களை நிறைவேற்றுகிறோமா என்று எண்ணி பார்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கான விருப்பு வெறுப் புகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. ஜாதி சரி என்று சொல்லி ஒரு குழந் தையை வளர்ப்பதும் ஒரு வன்முறை தான். குழந்தைக்கு சிந்திப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு முன் இருந்த  உரிமைகள், சமூக நீதியை இன்றைக்கு ஏற்றவாறு கட்டமைக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் குழந்தைகளை அணுகுவது சுலபம்.  நீங்கள் அவர்களிடம் இருந்து வெகு தூரத்தில் இல்லை. அவர்களை புரிந்து கொள் வதற்கான வாய்ப்புகள் மற்றவர் களைவிட அதிகம். நீங்கள் இதுகுறித்து ஒரு குழு அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த  முயல வேண்டும். குழந்தை களை அக்கறையோடு, கவனத்தோடு பார்க்கும்போது உங்களுக்குத் தெரிந்த குழந்தைகளிடம் மாற்றத்தை உணர்ந் தால் என்ன பிரச்சனை என்று பேசுங்கள். அவர்கள் நம்பி பேசுவதற்கு ஓர் ஆள் வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு வேண்டும். அதிகம் பேசப்படாத விஷயமாக குழந்தைகள் உரிமை உள்ளது. சில குழந்தைகள் திருமணம் ஆகிவிட்டதால் பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து அந்த அதி காரிகளிடம் கேட்டால் அந்த குழந் தைகள் திருமணமாகி வேறு  இடத்திற்கு சென்றதால் எங்கள்  கட்டுப்பாட்டிற்குள் வராது என்கின்றனர். இதற்கு துறை களுக்கிடையே சேர்ந்து செயல்படும் தன்மை இல்லாததே காரணம். அவர்கள் புகார் அளித்திருந்தால் அதை தடுத்திருக்கலாம். குழந்தைகள் உரிமை குறித்து பேசப்பட வேண்டும். குழந்தைகளும் சுயமரியாதையோடு வாழ வேண்டிய உரிமை உள்ளவர்கள் என்றார். இதில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார், உதவிப் பேராசிரியர் அனந்த ராமகிருஷ்ணன், தோழமை  அமைப்பின் இயக்குநர் தேவநேயன் உள்ளிட்டோரும் பேசினர். மேலும் இந்த கருத்தரங்கில், “குழந் தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைத் திருமணங்களை தடுத்தல்” குறித்து பல்வேறு அமர்வுகளில் ஆலோசனை நடைபெற்றது.


No comments:

Post a Comment