சென்னை விமான நிலையத்தில் இந்தியில் மட்டுமே அறிவிப்பா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

சென்னை விமான நிலையத்தில் இந்தியில் மட்டுமே அறிவிப்பா?

சென்னை, செப்.14- சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான அறிவிப்புகளில் திடீரென தமிழ், ஆங்கிலம் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்டுள் ளது. 

உள்நாடு மற்றும் பன் னாட்டு விமான நிலையங் களில் நாள் ஒன்றுக்கு 450 விமானங்களுக்கு மேல் இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் 40 முதல் 45 ஆயிரம் பயணிகள் வரை வந்து செல்கின்ற னர். இவர்களில் பெரும் பான்மையோர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். சென்னை விமான நிலை யத்தில் விமானங்கள் புறப்பாடு, வருகை மற்றும் பயணிகள் பாதுகாப்பு சோதனை முடித்து, விமா னத்தில் ஏறுவதற்கு எந்த கேட் வழியாக செல்ல வேண்டும் போன்ற விவ ரங்கள் அங்குள்ள அறிவிப்பு போர்டுகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் ஏற்கெனவே ஒளிபரப்பா கிக் கொண்டு இருந்தன.

கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு, திடீரென தமிழ்மொழி அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, ஆங் கிலம், இந்தியில் மட்டும் அறிவிப்பு செய்யப்பட் டது. அது பெரும் சர்ச் சைக்குள்ளானது. அப் போது, சென்னை விமான நிலைய இயக்குநராக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த சந்திரமவுலி என்ற உயர் அதிகாரி, உடனடி யாக இப்பிரச்சினையில் தலையிட்டு, 3 மொழிகளி லும் தொடர்ந்து ஒளி பரப்பு செய்யப்படும். திடீ ரென தமிழ் மொழி ஒளி பரப்பு நிறுத்தியதற்கு என்ன காரணம் என்று விசாரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதியளித் தார்.

அதன்பின்னர், அறிவிப்புகள் அனைத்தும் தொடர்ந்து 3 மொழிகளி லும் ஒளிபரப்பு செய்யப் பட்டது. இந்நிலையில், சமீப காலமாக தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழி களிலும் ஒளிபரப்பு செய்வது அவ்வப்போது நிறுத்தப்பட்டு, முழுக்க முழுக்க இந்தியில்தான் ஒளிபரப்பப்படுகிறது. கடந்த இரு நாள்களுக்கு முன்பும் நள்ளிரவில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், அபுதாபி செல்லும் எத்தி யாட் விமானப் பயணிகள், எந்த கேட் வழியாக, விமானத்தில் ஏற செல்ல வேண்டும் என்பது பற் றிய அறிவிப்பு இந்தியில் மட்டுமே போர்டில் ஒளி பரப்பப்பட்டது. இத னால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

சில பயணிகள் டிவிட் டர் மூலம், சென்னை விமான நிலைய அதிகாரி களுக்கு தங்கள் எதிர்ப் பையும், கண்டனங்களை யும் தெரிவித்தனர். இந் நிலையில் பயணிகள் டிவிட்டரில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித் ததற்கு, விமான நிலைய நிர்வாகம் டிவிட்டரில் அளித்துள்ள பதிலில், 

‘சென்னை விமான நிலையத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளிலும் அறிவிப்புகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் புறக்கணிக்கப் பட்டு, இந்தியில் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுவ தாக வந்த புகாரை விசா ரித்துக் கொண்டு இருக்கி றோம். அதற்கு காரணமா னவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனி மேல் தொடர்ச்சியாக 3 மொழி களிலும் ஒளிபரப்பு செய் யப்படும்’ என்று பதிவு அளித்துள்ளனர். ஆனா லும் பயணிகள் தரப்பில், அவ்வப்போது திடீர் திடீ ரென தமிழ், ஆங்கிலத்தை, புறக்கணித்து இந்தியில் மட்டும் ஒளிபரப்பு செய் யப்படுவது, சென்னை விமான நிலையத்தில் சமீப கால வழக்கமாக உள்ளது. இதற்கு ஒரு சில உயர் அதி காரிகள்தான் காரணம்  என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment