மியான்மா நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் - தமிழர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

மியான்மா நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் - தமிழர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை!

ஒன்றிய அரசுக்குக் கழகத் தலைவர் வேண்டுகோள்!

மியான்மா நாட்டில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்களையும், அதில் மாட்டி அவதிக்குள்ளாகும் 50 தமிழர்களையும் ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை முழு முயற்சி எடுத்து மீட்கவேண்டியது மனிதநேய அடிப்படையிலும், நாட்டு உணர்வின் அடிப்படையிலும் மிக முக்கியமாகும்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் அவர்களது துயர நிலையை விளக்கியுள்ளார்.

உடனடியாக அவசர நடவடிக்கைகளை ஒன்றிய அரசு காலதாமதமின்றி செய்யவேண்டியது அவசியம், அவசரம் ஆகும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

21.9.2022

சென்னை 

No comments:

Post a Comment