இருண்ட தமிழ்நாட்டில் பகுத்தறிவைப் பரப்பிய மேதை ஜாதி ஒழிப்பில் காந்தியாரை மிஞ்சியவர் பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

இருண்ட தமிழ்நாட்டில் பகுத்தறிவைப் பரப்பிய மேதை ஜாதி ஒழிப்பில் காந்தியாரை மிஞ்சியவர் பெரியார்!

தந்தை பெரியாருக்கு 1969இல் இங்கிலீஷ் வார ஏடான 

‘சங்கர்ஸ் வீக்லி’  சூட்டிய புகழ்மாலை:

மத மவுடீகம், மூடநம்பிக்கை ஆகிய இவற்றின் முன் மண்டியிட்டு கிடந்த தமிழ் நாட்டு மக்களுக்கு பகுத்தறிவு ஒளியூட்டி, தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்தி, உயர் ஜாதிக்காரர்கள் ஜாதிக் கொட்டத்தை அடக் கிய உன்னத மாபெரும் மேதை தந்தை பெரியார் அவர்கள்.

அவர் பணி காந்தியாரின் சீர்திருத்தத் தையும் மிஞ்சியது. காலத்தை வென்று உயர்ந்து நிற்கும் அவருக்கு தமிழ்நாடெங் கிலும் சிலைகள் அமைக்கப்படுகின்றன. 

கடவுள் பற்றிய அவரது தேர்ந்த கருத் துகள் அவரது சிலையின் பீடத்திலேயே பொறிக்கப்படும் வகையில் அவரது தொண்டு பலன் தந்துள்ளது என்று பல அரிய கருத்துகளை புதுடில்லியிலிருந்து வெளிவரும் பிரபல இங்கிலீஷ் கார்ட்டூன் வார ஏடான ‘சங்கர்ஸ் வீக்லி’(8.06.1969) இவ்வாரத்திற்குரிய மனிதர்’ என்ற தலைப் பில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.  

மிகுந்த முனைப்பும், கவர்ச்சியும் நிறைந்த சுயசிந்தனைக்கும், துணிச்சலுக் கும் பேர் போன தேசத் தலைவர்களில் ஒருவரது 90ஆவது பிறந்த நாள் ஆண்டு விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப் படாதது இந்த நாட்டுக்கே உரிய விசித்திரங் களில் ஒன்றாகும்.

காந்தியை விட பெரியவர்

மகாத்மா காந்தியை விட திரு.ஈ.வெ.ராமசாமி நாயக்கரே தமிழ்நாட்டில் ஜாதி முறையை முறிப்பதில் சிறப்பான சாதனை செய்துள்ளவர். தாழ்த்தப்பட்ட மக்களை - அரிஜனங்களை சமுதாயக் கொடுமையி லிருந்து விடுதலை செய்தவராக சொந்தம் கொண்டாடுபவர்கள் பலர் இருக்கின்றனர். 

மதப்பற்றும் மூடநம்பிக்கைகளும் பெரும் அளவில் பரவிக்கிடக்கும் நிலையில் மக்கள் மதி மயங்கிக்கிடக்கும் ஒரு நாட்டில் ஈ.வெ.ரா அவர்கள் அம்மத நம்பிக்கை முழுவதையும் முழுமூச்சாக எதிர்த்து வருவது மகத்தான துணிச்சல் மிக்க சாதனையாகும். 

இங்கர்சால் - சார்வாகர் (போன்றவர்)

கர்னல் இங்கர்சால் தனது நாத்திக கொள்கைக்  கோட்பாடுகளை கைவிடுவ தற்கு இணங்காது. அமெரிக்க குடியரசுத் தலைவர் பதவியையே உதறித் தள்ளியவர். நாத்திகத்தில்  கர்னல் இங்கர்சால் கொண் டிருந்த தீவிர ஆர்வமும் சார்வாகர் கொண் டிருந்த நாத்திகக் கோட்பாடு அறிவொளியும் போன்றது இவரது நாத்திகக் கோட்பாடும் இவ்வகை பகுத்தறிவொளி விளக்க நல்லு ரைகளும்.

மூடநம்பிக்கை 

இருட்டை நீக்கிய ஒளி

மூடநம்பிக்கை மூடக்கொள்கைகள் என்றும் மிகக்கடும் இருட்டுப் படலமே மற்ற பகுதிகளை விட அதிகமாக அறிவுக் கண்ணை மறைத்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டிலே பகுத்தறிவு ஒளிக்கதிர்களை இவர் பாய்ச்சினார்.

இவரது திராவிடர் கழகமானது தமிழ்ச் சமுதாயத்திலே மிகக் கீழ்மட்ட அந்தஸ்தி லேயே வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு சுயமரியாதை ஏற்படச் செய்ததுடன் மாத்திரமல்லாமல் உயர் ஜாதிக்காரர்கள் தகுதியை எதிர்த்தது. 

திரு.நாயக்கர் அவர்கள் ஒரு சிறிய சமுதாய சீர்திருத்தவாதியாகத்தான் பொது வாழ்க்கையைத் துவக்கினார். 

தமது நோக்கமான சமுதாய சீர்திருத்தத் துக்கு - சமுதாய அமைப்பை அடியோடு மாற்றி அமைப்பதற்கு காங்கிரசுக் கட்சி ஒரு சாதனமாகலாம் என்று திரு. நாயக்கர் முதலில் நினைத்தார். பார்ப்பனர் ஆதிக்கம் வலுத்திருந்த தமிழ்நாடு காங்கிரசில் இவர் கேலிக்குரிய நபராகவும்  அக்கால வெறுப் புக்குரியவராகவும்  ஆக நேரிட்டு விட்டது. 

இவர் மாஸ்கோ சென்று லெனினைச் சந்தித்தார். இவ்விதம் லெனினைச் சந்தித்த வர்களில் உயிருடன் உள்ள மனிதர் இவரே யாகும். பொதுவுடைமைக் கோட்டுப்பாடு இவரைக் கவர்ந்தது. ஆனால், அது அப் போது கொண்டிருந்த முறைகளும், வழி வகைகளும் தமிழ்நாட்டு மக்களைக் கவராது என்பதை ஆய்ந்தறிந்தார். 

எனவே, சிந்தித்துப் பார்த்து, பின்னர் தமது வழியை அமைத்துக் கொண்டு விட்டார்.  

இப்போது அமெரிக்காவிலுள்ள கறுப் பர்,  நீக்ரோவர் ஆதிபத்திய இயக்கம் போன்றே இவரும் தமிழ்நாட்டில் சமுதாயத் தில் கீழ் மட்டத்திலே கீழ் ஜாதியராக வைக் கப்பட்டிருந்தவர்களை தமிழ்நாட்டின் ஆதிகுடிகளானவர்களைத் தட்டி எழுப்பி அவர்களுடைய திராவிடர் பரம்பரையிலே பெருமை கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இப்போது இவர் காலம் கடந்து வாழும் தமிழ்மேதைகளில் ஒருவராக விளங்குகிறார். அவரது மதிப்பு இப்போது தமிழ்நாட்டிலே  மிக உச்சத்துக்கு உயர்ந்து விட்டது. இங்கிலாந்து பெர்ட்ரண்ட் ரசல், மெக்சிகோ ஆல்ஃபரோ, சிக்யூரோஸ் ஆகியவர்கள் போன்று கடவுள் மறுப்புக் கொள்கையை அவரது தீவிரக் கருத்தை இவரது சிலையின் பீடம் தாங்கி நிற்கிறது என்பது இவரது சிறப்புக் கோட்பாடும் பண்புமாகும். 

நிலையான கொள்கை தான் சிறப்புப் பண்பு என்றால், இந்த முதுபெரும் மனித ரைப் போல, நிலையான தீவிர கொள்கைப் பற்றாளர் மிக மிக உயர்ந்த மனிதர்கள் என் பவர்களிலும்கூட கிடையவே கிடையாது. 

மற்ற இந்தியாவின் பெருமை மிக்க தனிப்பெருமை மகனும் இவரேயாவார். 

- ‘விடுதலை’ - 12.6.1969


No comments:

Post a Comment