மாநிலங்களின் தொழில் துறை வளர்ச்சிக்கான பிரச்சார திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

மாநிலங்களின் தொழில் துறை வளர்ச்சிக்கான பிரச்சார திட்டம்

 சென்னை, செப்.23 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டுக் கவுன்சிலின் துணைத் தலைவர் டாக்டர் இ. முத்துராமன் தலைமையிலான குழு, எம்.எஸ்.எம்.இ. அமைச்சகத்துக்கான ஒன்றிய அமைச்சர் நாராயண் டி ரானே அவர்களை புதுடில்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான  தங்களது புதிய பரந்த ஆன்லைன் ஊடகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து விளக்கியது. இவ்விழிப்புணர்வு பிரச்சாரமானது; சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரிடையே கொள்கைகள், சக்திகள்  ஆகியவற்றிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவ தற்கான  ஒரு தேசிய அளவிலான திட்டமாக இருக்கும்.  மாநிலங்களில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின்  செயல்படுத்தல் திறனை அதிகரிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment