அரசு நலத் திட்டங்கள் மின்சுவர் மூலம் விளம்பரம் அமைச்சர் சாமிநாதன் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 20, 2022

அரசு நலத் திட்டங்கள் மின்சுவர் மூலம் விளம்பரம் அமைச்சர் சாமிநாதன் பேட்டி

காஞ்சிபுரம், செப்.20  மாநகராட்சியின் 10  பேருந்து நிலையங்களில் முதற் கட்டமாக மின் சுவர் அமைத்து உட னுக்குடன் அரசு திட்டங்கள் விளம் பரப்படுத்தப்படும்

காஞ்சிபுரம்  அறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு செய்தி விளம் பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது.காஞ்சிபுரத்தில் உள்ள மேனாள் முதலமைச்சர் அறிஞர்.அண்ணா நினைவு இல்லத் தினை தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.அவரது இல்லத்தில் இருந்த அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஒளிப்படங்களையும் பார்வை யிட்டு அங்கிருந்த பார்வையாளர் கள் பதி வேட்டிலும் தனது வருகையை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டது மகிழ்ச் சியளிக்கிறது. அந்த இல் லத்தை செய்தித்துறை பராமரிப்பது மிகவும் பெருமையாகவும் இருக்கிறது.

சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், சமுதாயத்திற்காக உழைத்த வர்கள், மொழிக்காக பாடுபட்டவர்கள் ஆகியோருக்கு நினைவு இல்லங்கள் அமைத்தும், பராமரித்தும் வரு கிறது செய்தித்துறை. மேனாள் முதலமைச்சர் கலைஞர்  இணைந்து கிராமங்கள் தோறும் சென்று பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திய பெருமைக்குரியவர் அறிஞர் அண்ணா. அரசு செய்து வரும் பல்வேறு நலத் திட்டங்களையும் விரைவாக மக்களைப் போய் சேருவதற்காக சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விளம்பரம் செய்து வருகிறோம்.அரசு நலத்திட்டங் களை மின்சுவர் மூலம் விளம்பரப் படுத்துவ தற்காக 20 மாநகராட்சி களை தேர்வு செய்துள்ளோம். அதில் முதற்கட்டமாக 10 மாநக ராட்சிகளுக்கு ஒப்பந்தம் விடும் பணிகள் நடந்து வருகின்றன.இதன் மூலம் அரசின் செய்திகளும், மக்கள் நலத்திட்டங்களும் மக்களுக்கு விரைவாக போய்ச் சேர்ந்து விடும்.நீதிமன்ற தீர்ப்பின்படி அரசுப் பணியாளர் தேர் வாணையம் மூல மாகவே உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்

பத்திரிகையாளர்களுக்கென தனியாக நல வாரியம் தமிழ்நாடு முதலமைச்சரால் அமைக்கப்பட்டு அக்குழு 3 முறை கூடி ஆலோசனை நடத்தியிருக்கிறது. அதன் படி விரைவில் பத்திரிகையாளர் களுக்கு அரசின் அங்கீகார அடை யாள அட்டை வழங்கப்படவுள் ளது. மக்கள் தொடர்பு அலுவ லர் களுக்கு தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.


No comments:

Post a Comment