அக்கிரகாரத்தில் நுழைய அரசாங்கம் போட்ட தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

அக்கிரகாரத்தில் நுழைய அரசாங்கம் போட்ட தடை

பேராசிரியர் பி.எஸ். சந்திரபாபு எழுதி, எமரால்டு பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள Social Protest in Tamilnadu  எனும் நூலிலிருந்து சில செய்திகள்: 

சுயமரியாதை இயக்கம் பற்றி 1920 முதல் 1940 வரை நூலாசிரி யர் ஆய்வு நடத்தி டாக்டர் பட்டம் பெற்றவர்; அந்த ஆய்வே இந்த நூல்.

தென்னார்க்காடு மாவட்டம் கமலாபுரம் எனும் ஊரில் 1924இல் நடந்த சம்பவம் இது. ஆர். வீரய்யன் என்பவர் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்; சென்னை மாகாண சட்ட சபையின் உறுப்பினரும் கூட! உள்ளூ ரில் அக்கிரகாரத்தில் அஞ்சலகம் இருந்ததால் அஞ்சலகம் போவதற்கு அவர் அக்கிரகாரம் வழியாகச் சென்ற போது பார்ப்பனர்கள் அதற்கு எதிர்ப் புத் தெரிவித்து தடுத்து நிறுத்தினார்கள். அஞ்சலகத்தில் ஒரு கடிதத்தைப் போட்டுவிட்டு, அக் கிரகாரத்திலுள்ள ஓர் ஆரம்பப் பள்ளிக்குப் போன போது அவரை, பார்ப் பனர்கள் தடுத்து நிறுத்தி எதிர்ப்புத் தெரிவித்தார்கள். (“குடிஅரசு” 18-7-1937) அரசாங்கத்துக்கு இந்த உண்மை தெரியாதது அல்ல; தாழ்ந்த ஜாதிக்காரர் என்ற அடிப்படையில்தான் அவ ருக்கு அக்கிரகாரத்தில் நடக்கும் உரிமை தடுக்கப் பட்டது! என்றாலும், இந்தப் பிரச்சினைகளைப் பெரிது படுத்தினால் சமுதாயத்தில் பதற்றம் உருவாகும் என் றும்; அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சிகள் வெடிக் கும் என்றும் அரசாங்கம் அஞ்சியது. அதனைத் தொடர்ந்து 1925 ஆம் ஆண்டு ஓர் அரசாங்க உத்தரவு வந்தது. அந்த உத்தரவில் இப்படிக் கூறப்பட்டிருந்தது.

“அக்கிரகாரத்தில் ஏதேனும் வியாபாரக் கடைகள் இருந்தாலொழிய, அக்கிரகார உரிமைகளில் தலையிட அரசாங்கத்துக்கு உரிமை இல்லை. ஒடுக்கப்பட்ட ஜாதி மக்கள் அக்கிரகாரம் வழியாக தாராளமாக நடந்து போய் அஞ்சலகத்துக்குப் போகமுடியாது’’

-என்று அந்த உத்தரவு கூறியது.

 - ஈ.சா. விசுவநாதன் எழுதிய ஆய்வு நூல்

பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பல காங்கிரஸ் தலைவர்கள் வர்ணாஸ்ரம வாதிகளாகவே இருந்ததை நேரில் பார்த்தார். 1920 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் பெரியாரும் சீனிவாச அய்யங்காரும் திண்டுக்கல்லில் சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது ஒரு பார்ப்பன காங்கிரஸ் தலைவர் வீட்டில் அவர் களுக்குச் சாப்பாடு அளித்தபோது, அய்யங்காரை வேறு இடத்திலும் பெரியாரை வேறு இடத்திலும் உட்கார வைத்துச் சாப்பாடு போட்டனர்.

(‘குடிஅரசு’ - 12.7.1931)

இதேபோல பெரியாரும் காங்கிரஸ் தலைவர் வெங் கிடுசாமி பிள்ளையும் குத்தாலத்தில் உள்ள பார்ப்பன காங்கிரஸ் தலைவர் ஒருவர் வீட்டுக்கு சாப்பாட்டுக்குச் சென்றபோது பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாத வர்களுக்கும் தனித்தனி இடத்திலேயே சாப்பாடு பரி மாறப்பட்டது. இந்த இரு தலைவர்களுக்கும் சாப்பாடு பரிமாறிய இடத்தில் ஏற்கெனவே சாப்பிட்டவர்களின் எச்சில் இலைகள் அப்படியே கிடந்தன;- அதேபோல இந்த இரு தலைவர்களும் அங்கேயே சாப்பிட்டு முடித்த பிறகு இவர்கள் சாப்பிட்ட இலைகளும் எடுக் கப்படாமல் நாள் முழுவதும் அப்படியே கிடந்தன. இதைப் பார்த்த இந்த இரு தலைவர் களும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் உள்ளானார்கள். பார்ப்பனரல்லாத வர்கள் சாப்பிட்ட இடத்தைப் பார்ப்ப னர்கள் சுத்தப்படுத்துவது பாவம் என்று கருதி அந்தக் குடும்பத்தினர் அவ்வாறு விட்டு வைத்திருந்தனர்.

(‘குடிஅரசு’ 12-7-1931)

காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி உரிமைத் தீர்மானம் ஏற் கப்படாததை எதிர்த்து வெளியேறிய பெரியாரும் அவரது ஆதரவாளர்க ளும் நீதிக்கட்சிக் கூட்டங்களில் பேசினர். நீதிக் கட்சிக் கூட்டங்களை ஏற்பாடு செய்தனர்.  தமிழ்நாட்டில் பல ஊர்களில் ‘சுயமரியாதை லீக்’குகளை அமைத்தனர். பெரியாரின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு அன் றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பெரியாரின் போக்குகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை தர ஒரு கமிட்டியை அமைத்தது. அந்தக் கமிட்டி தனது அறிக்கையில் பெரியார் போக்கில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது உண்மைதான் என்று கூறியதோடு, அவரை கட்சியை விட்டு நீக்கவும் பரிந்துரை செய்தது.

இதனடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பெரியாரோடு இருந்த உறவைத் துண்டித்துக் கொண் டது. இது பெரியாரை நீதிக்கட்சியின் பக்கம் மேலும் நெருக்கமாக்கியது.

- (‘தி இந்து’ 26.8.1926)

காங்கிரசோடு வேறுபட்டாலும் பெரியாரிடம் காந்தி ஆதரவு-  கதர் ஆதரவுக் கொள்கை 1927 வரை நீடித்தது. காங்கிரசிலிருந்து விலகிய பிறகும்கூட காந்தியை ஆதரித்தும், கதர்த் திட்டத்தை ஆதரித்தும் ‘குடி அரசு’, பத்திரிகையில் பல கட்டுரைகளை வெளி யிட்டார். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து இதுபற்றி பல கட்டுரைகள் வெளியிடப் பட்டன. “சாஸ்திரங்களும் ஸ்மிருதிகளும் பொய்’’ என் பதுபோன்ற காந்தி சொன்ன கருத்துகளை ‘குடிஅரசு’ உற்சாகத்துடன் வெளியிட்டது.

(‘குடி அரசு’ 9-1-1927)

பொருளாதாரச் சிக்கனம் கருதியும் வறுமையை ஓரளவு ஒழிப்பதற்கும் கதரை உடுத்துவதே சிறந்தது என்று மதுரையிலே நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (காங்கிர சிலிருந்து வெளியேறியபிறகு)

(2.1.1927 ‘குடிஅரசு’)

காந்தி தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பு கதர் விற்பனையை அதிகரித்துக் காட்ட வேண்டும் என்றும் அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டுக்கு உண்மையிலேயே சேவை செய்வது பார்ப்பனரல்லாதார் சமூகம்தான் என்பதை காந்தியார் உணரவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்தி வாழ்க; கதர் வாழ்க! என்ற முழக்கங்களே ‘குடிஅரசு’ ஏட்டின் முதல் பக்கத்தில் 1927-ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வரை வெளியிடப்பட்டது. அதே காலகட்டத்தில் ‘குடிஅரசு’ பத்திரிகையின் ஆசிரியரான பெரியார் தனது பெயருக்குப் பின்னால் இருந்த ‘நாயக்கர்’ ஜாதிப்பட்டத்தைத் துண்டித்துக்கொண்டார். 25.12.1927 ‘குடிஅரசு’ இதழ் முதல் அவரது பெயரை 

ஈ.வெ. ராமசாமி என்று வெளியிடத் துவங்கினார்.


No comments:

Post a Comment