கேரளாவில் ராகுல்: விவசாயிகளுடன் கலந்துறவாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

கேரளாவில் ராகுல்: விவசாயிகளுடன் கலந்துறவாடல்

ஆலப்புழா,செப்.19 11-ஆவது நாளாக பாதயாத்திரை சென்ற ராகுல்காந்தி, கேரளாவின் குட்டநாடு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.  கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். 11-ஆம் தேதி, நடைப்பயணம் கேரளாவில் நுழைந்தது. இடையில் ஒரு நாள் ஓய்வு எடுத்த நிலையில், 11-ஆவது நாள் நடைப்பயணம் நேற்று (18.9.2022) நடந்தது. கேரள மாநிலம் ஹரிபாடு என்ற இடத்தில் இருந்து காலை 6லு மணிக்கு நடைப்பயணம் தொடங்கியது. ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரமேஷ் சென்னிதாலா, கே.முரளீதரன், கொடிக்குன்னில் சுரேஷ், கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர் ராகுல் காந்தியுடன் நடந்தனர். சாலையின் இருபுறமும் ராகுல்காந்தியை பார்க்க ஏராளமானோர் திரண்டு நின்றனர். பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தகர்த்து, அவர்களுடன் ராகுல்காந்தி உரை யாடினார். மக்கள் ஓடிவந்து ராகுல் காந்தியை கட்டிப்பிடித்துக் கொண் டனர். அவர்கள் சொல்வதை அவர் காது கொடுத்து கேட்டார். ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த பிறகு, வழியில் உள்ள உணவகத்தில் இருந்து வரவ ழைக்கப்பட்ட தேநீரை அருந்தினார்.

தொடர்ந்து நடந்த நடைப்பயணம்யின்போது, ஒரு சிறுமி, தான் வரைந்த ஓவியத்தை ராகுல்காந்தியிடம் வழங் கினாள். வழியில் சைக்கிளில் சென்ற வர்களுடன் ராகுல்காந்தி உரையாடி னார். 13 கி.மீ. தூரம் நடந்த நிலையில், ஒட்டப்பனை என்ற இடத்தில் காலை நேர நடைப்பயணம் முடித்துக் கொள் ளப்பட்டது. அருகில் உள்ள கருவட்டா என்ற இடத்தில், ராகுல்காந்தியும், நடைப்பயணத்தில் பங்கேற்ற மற்றவர் களும் மதிய உணவு சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். பின்னர், குட்ட நாடு மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். மாலை 5 மணி யளவில், அங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள புறக்காடு என்ற இடத்தில் இருந்து மாலை நேர நடைப்பயணம் தொடங்கியது. 7லு கி.மீ. நடந்த பிறகு, மாலை 7 மணியளவில் வந்தனம் பகுதி யில் உள்ள டி.டி.மருத்துவ கல்லூரி அருகே நேற்றைய நடைப்பயணம் நிறைவடைந்தது. அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் புன்னப்ரா என்ற இடத்தில் உள்ள கார்மல் பொறியியல் கல்லூரியில் அனைவரும் இரவில் தங்கினர். இதுவரை நடைப்பயணத்தில் 200 கி.மீட்டரை நிறைவு செய்து விட்டதாகவும், இந்திய ஒற்றுமை பயணத்தை வரலாற்று சிறப்புமிக்கதாக கேரள மக்கள் ஆக்கிவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ 'டுவிட்டர்' பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. நடைப்பயணத்தின்போது தன்னை சந்தித்த மக்களின் ஒளிப்படங்களை வெளியிட்ட ராகுல்காந்தி, ''இவை படங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு குடி மகனின் உணர்வு, அன்பு'' என்று கூறியுள்ளார்


No comments:

Post a Comment