எதிர்க்கட்சித் தலைவர்கள்மீதான சி.பி.அய். வழக்கு: மோடி ஆட்சியில் 95 சதவிகிதமாக அதிகரிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

எதிர்க்கட்சித் தலைவர்கள்மீதான சி.பி.அய். வழக்கு: மோடி ஆட்சியில் 95 சதவிகிதமாக அதிகரிப்பு!

புதுடில்லி, செப்.23- எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சிபிஅய் மூலம்  வழக்குப் பதிவு செய்யப்படுவது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விடவும், மோடி ஆட்சி யில் 35 சதவிகிதம் அதிகரித்திருப்பது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான சிபிஅய் விசாரணை 60 சதவிகிதமாக இருந்த நிலை யில், அது மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக் காலத்தில் 95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

கடந்த 2004 முதல் 2014 ஆம் ஆண்டுவரையி லான- மன்மோகன் சிங் தலைமையிலான காங் கிரஸ் ஆட்சிக் காலத்தில், சிபிஅய் விசாரணை வளையத்தில் 72 அரசியல் தலைவர்கள் இருந்துள் ளனர். இவர் களில் 43 பேர், அதாவது 60 சத விகிதம் பேர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 29 பேர் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 

ஆனால், இதுவே, 2014 முதல் தற்போதுவரை- நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில், 124 அரசியல்  தலைவர்கள் சிபிஅய் விசாரணை வளையத்தில் வைக்கப்பட் டுள்ளனர் என்றால், இவர்களில் எதிர்க்கட்சி களைச் சேர்ந்தவர்கள் 95 சதவிகிதம் பேர். அதாவது 124 பேரில் 118 பேர் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். பாஜகவைச் சேர்ந்தவர்கள் வெறும் 6 பேர் மட்டுமே ஆவர்.  மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தை விடவும், மோடியின் 8 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அதிக மானோர் மீது சிபிஅய்  வழக்கு போடப்பட்டுள்ளது. 72 என்ற எண் ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

எதிர்க்கட்சிகளில் அதிகபட்சமாக- மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த தலைவர்கள் 30 பேர் சிபிஅய் விசாரணை வளையத் தில் உள்ளனர். இதேபோல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 26 பேர், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தலா 10 பேர், ஒய்எஸ்ஆர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் 6 பேர்,  பகுஜன் சமாஜ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி யைச் சேர்ந்தவர்கள் தலா 5 பேர் சிபிஅய் விசார ணையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த கட்சிகளுக்கு அடுத்தபடியாக, அதிமுக, சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்தவர்கள்  தலா 4 பேர், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 3 பேர், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், மெகபூபா முப்தி தலைமையி லான மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் தலைமையி லான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியிலிருந்து தலா ஒருவர் மற்றும் ஒரு சுயேச்சை ஆகியோர் சிபிஅய் விசாரணையில் கொண்டுவரப்பட் டுள்ளனர். 

இதுதொடர்பான புள்ளிவிவரங் களைக் கூறும் மற்றொரு கணக்கு, மன்மோகன் சிங்  தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 4 மேனாள் முதலமைச் சர்கள் மீது  சிபிஅய் வழக்கு போட்ட நிலையில், பாஜக  ஆட்சிக் காலத்தில் 12 மேனாள் முதலமைச்சர்கள்மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. 

இதேபோல்  காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2 அமைச்சர்கள்,  13 நாடா ளுமன்ற உறுப்பினர்கள் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மேனாள் சட்டமன்ற உறுப்பினர், 3 மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது  வழக்குப் போடப்பட்டது என்றால், இது பாஜக  ஆட்சியில் 10 அமைச்சர் களாகவும், 34 நாடாளுமன்ற உறுப் பினர்கள், 27 சட்டமன்ற உறுப்பினர் கள், 10 மேனாள்  சட்டமன்ற உறுப்பி னர்கள், 6 மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிபிஅய் விசார ணைக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment