அமெரிக்காவில் கல்வி பயில 82 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு விசா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

அமெரிக்காவில் கல்வி பயில 82 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு விசா

வாசிங்டன்,செப். 10- நடப் பாண்டில் இதுவரை 82,000 இந்திய மாணவர் களுக்கு அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளி நாட்டு மாணவர்களுக்கு எப்1 மற்றும் எம்1 ஆகிய விசாக்கள் வழங்கப்படு கின்றன. பட்டப்படிப்பு, உயர் படிப்புக்கு எப்1 விசாவும் தொழிற்கல் விக்கு எம்1 விசாவும் வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதா வது:

இந்தியாவில் டில்லி, சென்னை, அய்தராபாத், கொல் கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் அமெ ரிக்க தூதரகங்கள் செயல் படுகின்றன. இந்த தூதர கங்கள் மூலம் நடப்பாண் டில் இதுவரை 82,000 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா வழங் கப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டு மாண வர்களில் அதிகபட்சமாக இந்திய மாணவர்களுக்கே அதிக விசா வழங்கப்பட் டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்திய மாணவர்கள் முக்கிய பங்கு அளித்து வருகின் றனர். பன்னாட்டு சவால் களுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவும் அமெரிக்கா வும் முன்னணியில் உள் ளன.

அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளி நாட்டு மாணவர் களில் 20 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் ஆவர். கடந்த 2020-2021ஆம் கல் வியாண்டில் மட்டும் 1,67,582 இந்திய மாணவர் கள் அமெரிக்க கல்வி நிறு வனங்களில் இணைந்து உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment