திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கினர் (சென்னை- 6.9.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கினர் (சென்னை- 6.9.2022)

புதுக்கோட்டை மாவட்ட கழகம்,  அறந்தாங்கி மாவட்ட கழகம் சார்பில் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களிடம் பெறப்பட்ட 200 'விடுதலை' ஆண்டு சந்தா தொகை ரூ.4,00,000த்தை புதுக்கோட்டை மண்டல தலைவர் பெ.இராவணன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மு. அறிவொளி, செயலாளர் ப. வீரப்பன், அறந்தாங்கிமாவட்டத் தலைவர் க. மாரிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க. வீரய்யா, மகளிரணி தலைவர் ஞானம்பாள், பொதுக் குழு உறுப்பினர் சவுந்தரராஜன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்  பொன்னமராவதி அ. சரவணன் ஆகியோர் கழகத் தலைவரிடம் வழங்கினர்.  உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோர் உள்ளனர்.

திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் முதல்வர் பேராசிரியர் ப. சுப்பிரமணியன் அவர்கள் வசூலித்த விடுதலை சந்தா தொகை ரூ.90,000த்தை மேனாள் மாணவர்கள் க. கலைமணி, ச. விஜய், ஜெ.ஆனந்த், ம. சக்திவேல் ஆகியோர் கழகத் தலைவரிடம் வழங்கினர். உடன்: கவிஞர் கலி. பூங்குன்றன். 

புதுக்கோட்டை மண்டல தலைவர் மூத்த பெரியார் பெருந்தொண்டர் பெ. இராவணனின் 88ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கழகத் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். இராவணன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். உடன்: அவரது மகள் மீனா.

படம் 1: செய்யாறு மாவட்ட தலைவர் அ. இளங்கோவன், பொதுக் குழு உறுப்பினர் தி.காமராஜ் ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.48,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.  படம் 2: கன்னியாகுமரி மாவட்டக் கழகத்தின் சார்பில்  விடுதலை சந்தா தொகை ரூ.23,250அய் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன், சிவதாணு ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர். 


தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, ஆகியோர் விடுதலை சந்தா தொகை  ரூ.1,00,000த்தை கழகத் தலைவரிடம் வழங்கினர். மு. சண்முகப்ரியன், மணிதுரை ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.20,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

தமிழர் தலைவரிடம், இளைஞரணி செயலாளர் 
த.சீ. இளந்திரையன் விடுதலை சந்தா தொகை ரூ.50,000, சிதம்பரம் மாவட்ட கழகம் சார்பில் கழகச் சொற்பொழிவாளர் யாழ். திலீபன் விடுதலை சந்தா தொகை ரூ.9,900,  இராணிப்பேட்டை மாவட்ட கழகம் சார்பில் மண்டல தலைவர் பு. எல்லப்பன், மாவட்டத் தலைவர் சு. லோகநாதன் விடுதலை சந்தா தொகை ரூ.7,000 வழங்கினர்.





No comments:

Post a Comment