செப்டம்பர் 17 காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

செப்டம்பர் 17 காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!

சென்னை, ஆக.6  தந்தை பெரியார் அவர் களின் 144 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று முதலமைச்சர் பங்கேற்கும் பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

முதலமைச்சருடன் சந்திப்பு!

இன்று (6.9.2022) காலை 9.30 மணியளவில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து கழகத் தலைவர் உரையாடினார். முதலமைச்சருக்குப் பொன் னாடை அணிவித்து இயக்க நூல்களை அளித்தார். கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.

பெரியார் உலகத்திற்கு  அடிக்கல் நாட்டு விழா!

தந்தை பெரியார் அவர்களின் 144 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியன்று காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை சென்னை பெரியார் திடலில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்தம்  144 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா - சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுவதோடு, பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்கிறார்.

இந்தியாவின் ‘திராவிட மாடல்' அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கான அடிக்கல் நாட்டி சிறப்புரை நிகழ்த்திட மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தந்தார்.

மாண்புமிகு அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு  மற்றும் தயாநிதிமாறன் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினர் இ.பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கடந்த ஆண்டு இதே நாளில் (செப்டம்பர் 6, 2021) பகுத்தறிவு ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாள் என்று அறிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்ற ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment