மும்பை பாண்டூப், தாராவியில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் 144ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

மும்பை பாண்டூப், தாராவியில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் 144ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா!

மும்பை, செப். 23- 17.9.2022 மாலை 6 மணிக்கு மும்பை பாண்டூப் திருவள்ளுவர் மன்றத்தின் சார் பில் தந்தை பெரியாரின் 

144 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு டன் நடைபெற்றது,

விழாவுக்கு வந்த அனைவரை யும் எஸ்.எஸ். தாசன் வரவேற் றார். விழாவுக்கு மும்பை திருவள் ளுவர் மன்ற செயலாளர், மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவருமான ஜேம்ஸ் தேவதாசன்  தலைமை வகித்தார். மும்பை பகுத்தறிவா ளர் கழக தலைவர் அ. இரவிச் சந்திரன் சமூக நீதி நாள் உறுதி மொழியைப் படித்தார். அனை வரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து மும்பை திரா விடர் கழக தலைவர் பெ .கணே சன், மனிதநேய இயக்கத்தை சார்ந்த சங்கர் திராவிடர், ஆகி யோர் உரைக்குப்பின் இறுதியாக லெமூரியா அறக்கட்டளைத் தலை வர் சு.குமணராசன் சிறப்புரை யாற்றினர். இந்நிகழ்ச்சியில் பம்பாய் திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகள், பிரைட் உயர் நிலைப் பள்ளியின்  ஆசிரியர் பெருமக்கள், மும்பை பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகி கள் கலந்து கொண்டு சிறப்பித் தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது.  விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பம்பாய் திருவள்ளுவர் மன்ற செயலாளர் ஜேம்ஸ்தேவதாசன் சிறப்பாக செய்திருந்தார்.

 

தாராவி  கலைஞர் மாளிகையில்...

மும்பை திராவிடர் கழகம் சார்பில் அறிவு உலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய 144 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மும்பை தாராவி  கலைஞர் மாளிகையில் 17.9.2022 மாலை 7.30 மணிக்கு நடைபெற்றது. 

பெரியார் பிஞ்சு க.அறிவு மலர் கடவுள் மறுப்புக் கூறி விழாவை தொடங்கி வைத்தார். விழாவுக்கு வந்திருந்த அனை வரையும் மும்பை திராவிடர் கழக செயலாளர் இ. அந்தோணி வரவேற்றார், மும்பை திராவிடர் கழக பொருளாளர் அ.கண்ணன் தொடக்க உரையாற்றினார். விழாத் தலைவர்  மும்பை திரா விடர் கழக தலைவர் பெ.கணே சன் சமூக நீதி நாள் உறுதி மொழியை படித்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கூட் டத் தலைவர் தந்தை பெரியார் கொள்கைகள் இன்றைக்கு  உலக மயமாகி கொண்டிருப்பதை  தமது உரையில் எடுத்து கூறினார்.

தொடர்ந்து தோழர் பெரியார் பாலாஜி, மகிழ்ச்சி மகளிர் பேரவை தோழர்கள் க.வளர்மதி இ.வனிதா ஜெய் பீம் பவுண்டே ஷன் பொறுப்பாளர் ராஜா குட்டி மும்பை மாநகர திமுக அவைத்தலைவர் வே.ம உத்த மன், பகுஜன் கிராந்தி மோட்சா அமைப்பின் பொறுப்பாளர் பாபு பாட்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராவி கிளைச் செய லாளர் ஞான. அய்யாப் பிள்ளை, மனிதநேய இயக்க பொறுப்பா ளர் சங்கர் திராவிடர் உரைக் குப்பின் இறுதியாக மும்பை பகுத்தறிவாளர் கழகத்தலைவர் அ.இரவிச்சந்திரன் உரையாற்றி னார்.

இந்த விழாவில் மும்பை மாநகர திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவர்கள் என்.வி. சண்முகராஜன், பனகுடி சண் முகவேல், மும்பை கழகத் தோழர் கள் சோ.ஆசைத்தம்பி, சோ.சவுந் தரபாண்டியன், அய். செல்வ ராஜ், க.அறிவுமதி, கலைஞர் மாளிகை காப்பாளர் க. ராஜன் தோழர் பூலங்குளம் ஜே.சுகு மாறன், ஜெய் பீம் அமைப்பின் தோழர்கள் சுரேஷ்குமார், வெண்ணிலா, இராசு ஆறுமுகம், சஞ்சய், விக்ரம், ,பகுஜன் கிராந்தி மோட்சா அமைப்பின் தோழர் கள் கிறிஸ்து ராஜா, ஜெயப்பிர காசு, கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கழகத் தோழர் பெரியார் பாலாஜி அவர்களால் கொண்டு வரப்பட்ட தந்தை பெரியார் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட் டது காரம்,தேநீர் வழங்கி சிறப் பிக்கப்பட்டது.

இறுதியில் மும்பை திரா விடர் கழக துணைச் செயலாளர் ஜே .வில்சன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment