பெரியார் மருந்தியல் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள் விழா கவிச்சுடர் கவிதைப்பித்தன் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 20, 2022

பெரியார் மருந்தியல் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள் விழா கவிச்சுடர் கவிதைப்பித்தன் சிறப்புரை

திருச்சி, செப். 20- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் களின் 144ஆவது பிறந்தநாள் விழா 16.09.2022 அன்று காலை 11 மணியளவில் கல்லூரி அரங்கத் தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரையாற்றினார். திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆரோக்கிய ராஜ் தலைமை வகித்து தந்தை பெரியார் அவர்களின் சமுதாயப் பணிகள் குறித்து உரையாற்றி னார். 

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான திராவிட முன் னேற்றக் கழகத்தின் இலக்கிய அணி மாநில துணைத் தலைவர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் சிறப்புரையாற்றினார். 

அவர் தமது உரையில் எத்தனையோ கருத்தரங்குகள், மாநாடுகள், ஆய்வரங்கங்களில் தாம் கலந்து கொண்டிருந்தாலும் என்றும் நெஞ்சத்தில் நீங்காத நினைவுகளை அளித்து நேர்த்தி யுடன் நடைபெற்றுக் கொண்டி ருக்கக்கூடிய பெரியார் மருந்தியல் கல்லூரியின் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா வில் கலந்து கொண்டதை மறக்க முடியாது என்றும் வீரமங்கை வேலுநாச்சியார் நாடகத்தை மாணவர்கள் உணர்வுப்பூர்வ மாக நடத்திக்காட்டிய மாண்பை எனது எண்ணத்திலிருந்து நீக்க முடியாது என்றும் உரையாற் றினார்.

அறிவொளி பாய்ச்சி

மேலும் ஆண்டாண்டு காலம் ஜாதியின் பெயரால் மதங்களின் பெயரால் அடிமைப்பட்டுக் கிடந்த மானுட சமுதாயத்திற்கு அறிவொளி பாய்ச்சி ஆனந்த வாழ்வு தந்தவர் தந்தை பெரியார் அவர்கள். அவர்களின் பிறந்த நாள் என்பது நாம் அவருக்கு செய்யக்கூடிய நன்றிகாட்டும் பெருவிழா என்றும் அவர் இல்லை என்றால் சுயமரியாதை, பகுத்தறிவு, தன்மானம், இன மானம் என்பது இல்லாமல் போயிருக்கும் என்றும் உரையாற் றினார். புத்த நெறியை மதித்து எவரையும் தன் தலைவராக ஏற்றுக்கொள்ளாத அறிவுலக மேதை அம்பேத்கர் அவர்களே தன் தலைவராக ஏற்றுக் கொண்ட  ஒரே தலைவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள்தான். வியாபாரக்குடும்பத்தில் பிறந் திருந்தாலும் விலைகொடுத்து வாங்கமுடியாத தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

கருப்பு எரிமலை

ஆரிய இனத்தை நடுநடுங்க வைத்த கருப்பு எரிமலை தந்தை பெரியார். சாதாரண கவிதைப்பித்தன் இத் தனை மேடைகளையும் இத் தனை விருதுகளையும் பெற்றிருக் கிறேன் என்றால் அதற்கு அடித் தளமிட்டவர் தந்தை பெரியார் அவர்கள். அவர் இல்லை என்றால் புத்தகங்கள் நம் கைக்கு கிடைத்திருக்குமா. அவருடைய தொண்டால், புரட்சியால்தான் இன்று நம் இனமக்கள் பல்வேறு பொறுப்புக்களை அலங்கரிக் கின்றனர். பெண்கள் ஆணுக்கு நிகராக  செயல்படுகிறார்கள். அய்யா அவர்களால் பட்டை தீட்டப்பட்ட தலைவர் ஆசிரியர் அவர்கள். எந்த யானையும் மாலை போட்டு தலைவராக அவரை தேர்ந்தெடுக்கவில்லை. தந்தை பெரியார் அவர்கள் எடைபோட்டு தேர்ந்தெடுத்த பெருமைக்குரியவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள். தம்முடைய சட்டப்படிப்பிலே தங்கப்பதக் கம் பெற்று நல்ல தொழில் வளம் மிக்க துறையில் இருந்தபோதி லும் தந்தை பெரியார் இட்ட கட்டளைக்காக கல்விப்பணி, இயக்கப்பணி, சமுதாயப்பணி, ஆசிரியர் பணியினை தொடர்ந்து செய்து வருகிறார். ஒரு கால கட்டத்தில் விடுதலையை நிறுத் தக்கூடிய சூழ்நிலையிலும் தந்தை பெரியார் அவர்கள் விடு தலை நாளிதழை நானே அச்ச டித்து, நானே படிப்பேனே தவிர ஒருபோதும் நிறுத்தமாட்டேன் என்று வைராக்கியத்துடன் நடத்திய அந்நாளேட்டை அவரது மறைவிற்குப்பிறகும் ஆசிரியராக அறுபது ஆண்டுகள் சிறப்பாக தொடர்ந்து நடத்தி வருகிறார். 

அறிவுச் சூரியன்

எப்போதும் புத்தகங்களோடு இருக்கக்கூடியவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். அவரைப் பின்பற்றி மாணவர்கள் அதிகம் புத்தகங்களை படிக்க வேண்டும். புத்தகங்களால்தான் இச்சமுதாயத்தை மாற்றிக் காட்ட முடியும். தன்னை இம் மேன்மைக்கு உயர்த்தியதும் புத்தகங்கள் தான் என்றும் தன்னை முத்தமிழறிஞர் கலை ஞர் அவர்களிடம் அறிமுகம் செய்தது ஆசிரியர் அவர்கள் தான் என்றும் உரையாற்றினார். அந்த வாய்ப்புக்கள் தான் கலை ஞர் அவர்களின் மனதில் இடம் பிடிக்க காரணமாக அமைந்தது. அந்த வாய்ப்புக்கள் தான் என்னை முரசொலியில் அதிக வரிகள் எழுதவைத்தது. உலகத் திற்கு ஒரு சூரியன் என்றால் நம் அனைவருக்கும் அறிவுச்சூரியன் தந்தை பெரியார் அவர்கள் அவ ருடைய பிறந்தநாளினை கொண் டாடுவதுதான் முதற்கடமை என்று உரையாற்றி சாமி கைவல் யம் முதியோர் இல்லம் மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்ல பெரியோர்களுக்கு சிறப்பு செய்து பெரியாரைத் துணை கொள் என்ற தலைப்பில் கலை ஞர் கருணாநிதி நூலகம் நடத் திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையினையும் வாழ்வியல் சிந்தனைகள் புத்தகங்களையும் வழங்கி சிறப்பித்தார்.

முன்னதாக மருந்தியல் மாண வர்களின் வீரமங்கை வேலுநாச்சி யார் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அத னைத்தொடர்ந்து திராவிடர் மாணவர் கழக மாணவிகள் தந்தை பெரியாரும் பெண் விடு தலையும், தந்தை பெரியாரும் சமூகநீதியும் என்ற தலைப்பில் கருத்துரை மற்றும் கவிதை வாசித்து சிறப்பித்தனர். பெரியார் மருந்தி யல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அமு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெரியார் மன்ற செயலர் பேராசிரி யர் க.அ.ச. முகமது ஷபீஃக் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மன்ற இணைச்செயலர் திருமதி அ.ஷ மீம் அவர்கள் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment