தந்தை பெரியார் அவர்களின் 144-ஆவது பிறந்த நாள் “சமூக நீதி நாள்” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

தந்தை பெரியார் அவர்களின் 144-ஆவது பிறந்த நாள் “சமூக நீதி நாள்”

தந்தை பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்

சென்னை,செப்.16- தந்தை பெரியார் பிறந்த நாள் விழா குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு அரசின் சார்பில், தந்தை பெரியார் அவர்களின் 144-ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, 17.09.2022 அன்று காலை 9.00 மணியளவில், அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்படவுள்ள அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள். 

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஈரோடு வெங்கட நாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதி யருக்கு 17.09.1879ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.  ஜாதியப் பாகுபாட்டினைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக நீதி காத்திடத் தொடர்ந்து போராடியவர்.  மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கை யாகக் கொண்டு, ஜாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகியவற் றிற்காகத் தொடர்ந்து போராடினார்.

1924ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டமைக்கு எதிராகப் போராடி “வைக்கம் வீரர்” என்று அழைக் கப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே தீண்டாமையையும், ஜாதிக் கொடுமை யையும் எதிர்த்து முதன் முதலாக நடைபெற்ற போராட்டம் என்ற சிறப்பை வைக்கம் போராட்டம் பெற்றது. பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியவர். சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் திகழ் வதற்கு வழிகாட்டி, தனது இறுதி மூச்சு வரை சுயமரியாதைக் கொள்கைக்காகவே வாழ்ந்தவர்.    தமிழ்நாட்டில் சமூக மாற் றத்தை உருவாக்கி, மக்களிடையே ஒற் றுமையை வளர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பெரும் பங்காற்றினார். 

தந்தை பெரியார்   படிப்பறிவின் மூலமே பகுத்தறிந்து விழிப்புணர்வு பெற முடியும் என்பதைத் தன் இலட்சியமாகக்  கொண்டு, 'குடிஅரசு' வார இதழைத் தொடங்கினார். சமுதாயத்தில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை விரட்டிட சுயமரியாதை இயக்கத்தையும் தொடங் கியவர்.  மனிதனாய் பிறந்த ஒவ்வொரு வரும் சுய மரியாதைக்கு உரிமை உடையவர் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். 

தமிழினத்தின் எழுச்சிக்காகப் பாடு பட்டு, சுய மரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி ஆகிய அடிப்படைக் கொள்கை களால், இன்றும் மக்களின் மனங்களில் அவர் வாழ்ந்து வருகிறார் தந்தை பெரியார். தனது 18ஆம் வயதில் தொடங் கிய அவரது பொது வாழ்க்கையானது, இறுதி மூச்சுவரை தொடர்ந்தது.

 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் நாள் அரசு விழாவாகக் கொண் டாடப்பட்டு வருகிறது. மேலும், அன்னா ரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைப்பிடிக்கப் பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களி லும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 144-ஆவது பிறந்த நாள் சிறப்பாகக் கொண் டாடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவ லர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

-இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment