உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு எதிர்ப்பு வழக்கு: உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு எதிர்ப்பு வழக்கு: உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடில்லி, செப்.28- உயர்ஜாதி ஏழைகள் அல்லது முன்னேறிய வகுப்பில் பொரு ளாதாரத்தில் நலிவடைந்தோர் அல்லது முற் படுத்தப்பட்ட வகுப்பில் ஏழைகள் எனப்படு வோருக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒன்றிய பாஜக அரசு வழங்கி இருக்கும் 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. 

சமூகம், பொருளாதார ரீதியாக ஒடுக்கப் பட்ட சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு வழங் கப்படுகிறது. இதுதான் சமூக நீதி என்பதால் இந்திய அரசமைப்புச் சட்டமும் இதனை உறுதி செய்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக் கான இடஒதுக்கீட்டுக்காகத்தான் இந்திய அர சமைப்புச் சட்டம் முதன் முதலாக திருத்தப் பட்டது. இந்தத் திருத்தத்துக்காக போராடியது தந்தை பெரியார்தான்.

இடஒதுக்கீட்டை உயர்ஜாதியினர் எனப் படும் முற்பட்ட வகுப்பினர் கடுமையாக எதிர்த்து வந்தனர். ஒன்றிய அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியது மண்டல் கமிஷன். இதனை எதிர்த்து உயர்ஜாதி எனப்படுகிற முற்பட்ட வகுப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி தீக்குளித்த கொடுமையும் இந்தியாவில்தான் அரங் கேறியது. இடஒதுக்கீடுக்கு எதிராக எத்த னையோ சட்டப் போராட்டங்களை, வழக் குகளை நடத்தி வருவதும் முன்னேறிய அல்லது உயர்ஜாதியினர்தான்.

10% இடஒதுக்கீடு

ஆனால் காலம் மாற உயர்ஜாதி எனப் படும் முற்படுத்தப்பட்டோரும் இடஒதுக்கீடு கோரினர். இதனடிப்படையில்தான் உயர்ஜாதி எனப்படும் முற்படுத்தப்பட்டோரில் பொரு ளாதார ரீதியான பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. இதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 103 ஆவது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. முற்படுத்தப்பட்டோ ரில் ஆண்டு வருமானம் ரூ8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளோருக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்துமாம்.

தீர்ப்புக்கு எதிரானது

பொதுவாக இடஒதுக்கீடு வழக்குகளில் இடஒதுக்கீடு அளவானது 50%-த்தை தாண்டக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. ஒன்றிய அரசு உயர்ஜாதி ஏழை களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் இந்த 50% இடஒதுக்கீடு வரம்பு மீறப்பட்டிருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

‘‘நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் சமூக- கல்வி அடிப்படையில்தான் இடஒதுக் கீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது; ஆனால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தவில்லை'' என இந்த வழக்குகளில் சுட்டிக்காட்டப் பட்டி ருந்தது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவரும், நாடா ளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமா வளவன் உள்ளிட்டோரும் இவ்வழக்கை தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து விசாரித்தது. இவ்வழக்கில் திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்டோர் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். 

விசாரணை நிறைவு- 

தீர்ப்பு ஒத்திவைப்பு

உச்சநீதிமன்றத்தில் நேற்று (27.9.2022) முதல் அரசமைப்புச் சட்ட அமர்வு முன்னி லையிலான வழக்கு விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரு கின்றன.  10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு விசாரணையும் நடைபெற்றது. இவ்வழக்கு விசாரணை நேரடியாகவும் ஒளிபரப்பானது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நேற்றுடன் நிறை வடைந்தன. இதையடுத்து உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் உச்சநீதி மன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment