அரியலூரில் கழக இளைஞர்களின் எழுச்சிக் காவியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

அரியலூரில் கழக இளைஞர்களின் எழுச்சிக் காவியம்

மாநாட்டுக்காக மகத்தான முறையில் 

உழைத்த சிங்கத் தோழர்களுக்குப் பாராட்டு!

"இளமை உணர்வோடு" சென்னை திரும்பினேன்!!

விரைந்து விடுதலை சந்தா சேர்ப்பில் ஆயத்தமாவீர்!!!

அரியலூரில் கடந்த 30.7.2022 அன்று நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டின் மாட்சியை அனைத்துக் கட்சியினரும் திகைத்து மகிழும் வண்ணம் - இளைஞர் கூட்டத்தின் எழுச்சிக்  காவியம் நடந்தேறியது!

காலையில் அந்த பெரிய மண்டபத்தில் இடமின்றி நெருக்கம்; வெளியே அதைப்போல திறந்த வெளியில் கொட்டகை போடப்பட்டு, மின்னணுத்திரைவழி அங்கே பல நூற்றுக்கணக்கில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் மாநாட்டு உள் அரங்க நிகழ்ச்சிகளைக் கண்டு சுவைத்து மகிழ்ந்தனர்.

'ஒரிஜினல் திராவிடக் கலையான' 'ஓகம்' (ஆசனம்) பற்றிய மீட்டுருவாக்க செய்முறைப் பயிற்சியை மேடையில் திருப்பூர் பயிற்சியாளர்  ஆசிரியர் கு. மணிவண்ணன், எஸ். சங்கர் குழு - மாணவர்கள் சிறிது நேரம் - சுமார் 20 நிமிடங்கள்  நண்பகலில் நடத்திக் காட்டியது ஈர்ப்புடன் அமைந்தது!

அடுத்தடுத்து (அனைவருக்கும் உணவுப் பரிமாற்றம்) - வாகனங்கள் எதிர்பார்த்ததைவிட மிக அதிகம் - அந்தத் திடலில் அணி வகுப்பு - 2000 கொடி ஏந்திய கொள்கைப் போராளிகள் இளைஞர் தம் கட்டுப்பாடு மிகுந்த அணிவகுப்பும், உறுதியேற்பும் மயிர்க் கூச்செறியச் செய்தன - அனைத்து தரப்பு மக்களையும்.

பரவசத்தின் உச்சிக்கே சென்றனர் பலரும்! பேரணியின் பெருமையை - எளிதில் விளக்க இயலாது. பல தரப்பட்டோரும் வியந்தனர்! கழக வீரர்கள், வீராங்கனைகள் கொள்கை முழக்கம் செய்து கட்டுப்பாடு காத்துச் சென்றனர் - ஒரு சிறு அசம்பாவிதமோ, சலசலப்போ கிடையாது!

காவல்துறையினருக்கு எந்த சிக்கலையும் தராது ஆற்றொழுக்காக அனைவரும் அதிசயக்கத்தக்க வகையில் "'அற்புதக் காட்சியடி குதம்பாய்' அரியலூர் நிகழ்ச்சி அப்பாடி"  என்று பாடும்படி அமைந்தது. மாலை திடலிலும் கடலைக் காணா அரியலூரில் கருங்கடல் பொங்கியது! கடைசிவரை அமைச்சர்கள் மாண்புமிகு சா.சி. சிவசங்கர், சி.வெ. கணேசன் ஆகியோரின் அருமையான உரையும், மேடையில் தோழர் வீ.திராவிடவித்து - விஜயராணி திருமணமும், அரியலூர் மண்டல இளைஞரணி செயலாளர் பொன். செந்தில்குமார் - ராதிகா ஆகியோரின் தாலியகற்றும் பெண்ணடிமை ஒழிப்பு காட்சிப்படுத்தலும் அனைவரின் கவனத்தை ஈர்த்ததோடு பாராட்டையும் பெற்றது!

மாவட்டத் தோழர்கள் - பொறுப்பாளர்கள் மாவட்டத் தலைவர் தோழர் நீலமேகம் தலைமையில் ஒருங்கிணைந்து - ஒரு சிறு மனமாச்சரியத்திற்கும் இடம் தராமல் செய்து சரித்திரம் படைத்தனர்!

மாநாட்டில் வெற்றிக் கனி பறித்து நமக்குத் தந்த கழகச் செயல்வீர சிங்கக் குட்டிகளின் பட்டியல் பாருங்கள்! (இவர்களது) உழைப்பும் உறுதியும் வெற்றிக்கு வழி வகுத்து வரலாறு படைத்தது!

அரியலூர் ஜூலை - 30, திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு சிறக்க பணியாற்றியோர் விவரம்:

ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டோர்:

1. முனைவர் துரை.சந்திரசேகரன் - பொதுச் செயலாளர், 2. இரா.ஜெயக்குமார் - பொதுச்செயலாளர், 3. த.சீ.இளந்திரையன் - மாநில இளைஞரணிச் செயலாளர், 4. வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் - மாநில இளைஞரணி அமைப்பாளர்.

மாநாட்டு ஏற்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு உழைத்தவர்கள்:

1.விடுதலை நீலமேகம்- அரியலூர் மாவட்டத் தலைவர், 2.பொறியாளர் இரா.கோவிந்தராஜ் - மண்டலத் தலைவர், 3.க.சிந்தனைச்செல்வன் - மாவட்டச் செயலாளர், 4.சு.மணிவண்ணன்- மண்டலச் செயலாளர், 5.பேராசிரியர் தங்கவேல்,  6.பொன்.செந்தில்குமார் - மண்டல இளைஞரணிச் செயலாளர், 7.சு.அறிவன் - மாவட்ட -இளைஞரணித் தலைவர், 8.இரத்தின.ராமச்சந்திரன்- மாவட்ட அமைப்பாளர், 9.சங்கர்- மாவட்ட துணைச் செயலாளர், 10.தங்க.சிவமூர்த்தி- மாவட்ட ப.க தலைவர், 11.கோபாலகிருஷ்ணன்- அரியலூர் ஒன்றியச் செயலாளர், 12.மீன்சுருட்டி திலீபன் - மாவட்ட துணைத் தலைவர், 13.சிவக்கொழுந்து- மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர், 14.இளவரசன் - மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர், 15.க.கார்த்திகேயன் - மாவட்ட இளைஞரணி செயலாளர், 16.வி.திராவிடவித்து -  மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர், 17.முத்தமிழ்ச்செல்வன் - செந்துறை ஒன்றியத் தலைவர், 18.செந்தில் - மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் 19.லெ.தமிழரசன் - மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர், 20.இராசா.செல்வக்குமார்  - செந்துறை ஒன்றியச் செயலாளர், 21.செந்துறை திருமால்,  22.வழக்குரைஞர் இராஜா - மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர், 23.செந்துறை மதியழகன், 24.சிற்றரசு -திருமானூர் ஒன்றியத் தலைவர், 25.கோபிநாதன் - திருமானூர் ஒன்றியச் செயலாளர், 26.பொ.பாண்டியன் - ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர், 27.தியாக.முருகன் - ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர்,  28.இராமச்சந்திரன் - தா.பழூர் ஒன்றியத் தலைவர்,  29.ப.வெங்கடாசலம் - தா.பழூர் ஒன்றியச் செயலாளர், 30. பிரபாகரன் - ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர், 31.தமிழ்ச்சேகரன் - த.பழூர் ஒன்றிய அமைப்பாளர், 32.மு.இரஜினி - செந்துறை ஒன்றிய இளைஞரணி தலைவர், 33.இர.இன்பத்தமிழன் - மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர், 34.செல்லபாண்டியன் - அறிவு ஜீவா அச்சகம்  35.செந்துறை சோ.க.சேகர், 36.செந்துறை ஆசிரியர் வெங்கடேசன், 37.செந்துறை ஆசிரியர் திருநாராயணன், 38.செந்துறை ஆசிரியர் இரா.சந்திரசேகரன், 39.கு.தங்கராசு அரியலூர் நகர செயலாளர், 40.ஓவியர் புகழேந்தி, 41.சேகர் - திருமானூர் நகர செயலாளர், 42. த.செந்தில் - அரியலூர் ஒன்றிய இளைஞரணித் தலைவர். 

மாநிலம் முழுவதும் இளைஞரணி அணிவகுப்பு பணிகளை ஒருங்கிணைத்த மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள்:

தஞ்சை இரா.வெற்றிக்குமார், சென்னை சோ.சுரேஷ், திண்டிவனம் தா.தம்பிபிரபாகரன், திண்டிவனம் நா.கமல்குமார், கீழப்பாவூர் சவுந்திரபாண்டியன், தருமபுரி செல்லதுரை, ஜெகதாபட்டினம் குமார், 

மாநாட்டுப் பணிகளில் இளைஞர்களை ஒருங்கிணைத்த மண்டல இளைஞரணிச் செயலாளர்கள்:

சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர்- இர.சிவசாமி, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்- மு.சண்முகப்பிரியன், தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர்  - முனைவர் வே.இராஜவேல், திருவாரூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் -  நாத்திக.பொன்முடி, கடலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்- நா.பஞ்சமூர்த்தி, புதுச்சேரி மண்டல இளைஞரணித் தலைவர் - தி.இராசா, ஆத்தூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்- ப.வேல்முருகன், ஈரோடு மண்டல இளைஞரணிச் செயலாளர்- வெற்றிவேல், கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர்- தாராபுரம் முனீஸ்வரன், தருமபுரி மண்டல இளைஞரணிச் செயலாளர் - கிருட்டினகிரி சிலம்பரசன், புதுக்கோட்டை மண்டல இளைஞரணிச் செயலாளர் - க.வீரய்யா, மதுரை மண்டல இளைஞரணிச் செயலாளர் - இரா.அழகர், வேலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் எ.சிற்றரசு, ஆத்தூர் அ.சுரேஷ், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் - வழக்குரைஞர் தளபதி. பாண்டியன்.

அனைவருக்கும் வாழ்த்து மழைகள்!

அடுத்தடுத்துப் பணிகள் அணிவகுத்தாலும் - 'விடுதலை' சந்தா சேர்ப்பு போன்ற அயராத பெரும் பணி என்றாலும் களமாட அந்தக் கருஞ்சட்டைக் காளைகள் ஆயத்தத்தோடு, உறுதியோடும் நிற்பதுகண்டு, இவர்களின் தோழனும், தொண்டனுமாகிய நான் மேலும் இளமை பெற்று மேலும் உழைக்க இவர்களோடு போட்டி போடுவேன் என்பது உறுதியிலும் உறுதி!

"எம் இளைஞர்காள், தோழர்காள் என்ற அந்தக் கறுஞ்சிறுத்தைகளுக்கு எவரே இணை? என்ற பெருமிதத்தோடு பாராட்டி, வாழ்த்தி மகிழ்ந்து பாராட்டுகிறோம்.

தொண்டைத் தொடர்க!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
3.8.2022


No comments:

Post a Comment