உயர் இரத்த அழுத்தம் எப்போதெல்லாம் வரும்? யாருக்கெல்லாம் வரும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

உயர் இரத்த அழுத்தம் எப்போதெல்லாம் வரும்? யாருக்கெல்லாம் வரும்?

இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) ஆண்க ளுக்கு மட்டுமே வரும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இது தவறானதாகும். அமெரிக்க ஆய்வு ஒன்றின்படி பெண்களுக்கும் இரத்த அழுத்தம் பிரச்சினை அதிகமாக வருகிறதாம். 3 அமெரிக்கர் களில் ஒருவருக்கு இந்த அதிக இரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளது. குறிப்பாக 40, 50 மற்றும் 60 வயதுகளில் உள்ளோருக்கு இது வருகிறதாம். மெனோபாஸ் வரத் தொடங்கியதுமே அதிக இரத்த அழுத்தப் பிரச்சினையை பெண்கள் சந்திப்பதாகவும் ஆய்வு சொல்கிறது. இது அமெரிக்கர்களுக்கு மட்டும் அல்ல உலகளவில் அனைத்து பெண்களுமே இரத்த அழுத்த அபாயத்தை எதிர்கொள்கிறார்கள். பெண் கள் இரத்த அழுத்த அபாயத்தில் எதிர்கொள்ளும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

இரத்த அழுத்தம் குறித்து பல முறை நாம் பார்த்திருக்கிறோம். எனினும் சுருக்கமாக சொல்வ தானால் இரத்த அழுத்தம் என்பது நமது இரத்த நாளங்களில் இரத்தம் பாயும் வேகத்தைக் குறிப்ப தாகும்.அதிக இரத்த அழுத்தம் அல்லது ஹைபர் டென்ஷன் என்பது இந்த அழுத்தமான வழக்கத்தை அதிக அளவில் இரத்தம் பாயும்போது ஏற்படுவதாகும். ஈதை கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால் அது நாளடைவில் இரத்த நாளங்களை சேதப்படுத்தி விடும். இதனால் இதயம், மூளை மற்றும் உடலின் பிற உறுப்புகள் பாதிக்கப்படும்.உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அது பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் காட்டாது. உண்மையில் இது அமைதியாக இருந்து கொல்லும் நோயாகும். பெரும்பாலானோருக்கு இரத்த அழுத்தம் அதிகமான பிறகுதான் அதன் பாதிப்பே தெரிய வரும்.

நிலைமை மோசமாகும்போதுதான் தெரிய வருவதாலேயே இது மோசமான வியாதி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வேளை அதிக இரத்தம் அழுத்தம் ஏற்பட்டால், தோல் சிவந்து காணப்படும், கண்களில் சிவப்பு நிறம் ஏற்படும். நடுக்கம் ஏற்படும். இது அதீதமான இரத்த அழுத்தம் ஏற்படும்போது மட்டுமே தெரிய வரும். இதன் அடுத்த கட்டம் இரத்த நாளங்கள் சேதமடைவதே.

அறிகுறிகள் பெரிய அளவில் இல்லாமல் போவ தால் இரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது என்பதை ஒவ்வொரு மருத்துவ பரிசோதனையிலும் அறிந்து கொள்வது நல்லது.மெனோபாஸ் வருவதற்கு முன்பு பெரும்பாலும் பெண்களுக்கு அதிக இரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுவதில்லை. மெனோபாஸுக்குப் பின்னர்தான் இது பெரும்பாலும் ஏற்படுகிறது. வயதான பெண்களுக்கு அதிக இரத்த அழுத்தம் ஏற்படும்போதும் அவர்களுக்கும் அறிகுறிகள் தெரிவதில்லை.

அப்படியே ஏற்பட்டாலும் உயர் இரத்த அழுத்தம் உச்சத்தை அடையும்போதுதான் ஏற்படும். அதே கண் சிவப்பு, தோல் சிவப்பு, நடுக்கம் ஆகியவைதான் இவர்களுக்கும் ஏற்படும். அதனால் தான் ஒவ்வொரு முறை மருத்துவ பரிசோதனையிலும் இரத்த அழுத் தத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள் திருநங்கை களுக்கு அதிக இரத்த அழுத்தப் பிரச்சினை சாதா ரணமாக வருகிறது. இவர்களுக்கு அதிக அளவிலான மன அழுத்தம் உண்டாவதால் உயர் இஇரத்த அழுத்தமும் அதை தொடர்ந்து இதய நோய்களும் ஏற்படும் வாய்ப்புள்ளதாம்மேலும் 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின்படி பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் திருநங்கைகளுக்கு டைப் 2 டயாபட்டீஸ் மற்றும் ஹைபர்டென்ஷன் ஏற்படுவது 47 சதவீதம் குறைவதாக தெரியப்பட்டு உள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் இரத்த நாளங்கள் சேதமடைந்து உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உண்டு. அப் போது கீழ்க்கண்ட பிரச்சினைகள் ஏற்படலாம்:

பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, சிறுநீரக நாளங்கள் செயலிழப்பு, ‘டிமென்ஷியா‘, கண் பார்வை பறி போகும் அபாயம் ஆகியவை. 

கருவுற்ற பெண்க ளுக்கு அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது கர்ப்பிணிக்கும் வயிற்றில் வளரும் சிசுவுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத் தில் இயல்பாகவே இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது தீவிரமாகும் போது அது ப்ரீக்ளாம்ப்சியா நிலைக்குக் கொண்டு போய் விடும்.

5 சதவீத கர்ப்பிணிகளுக்கு இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இது தாய்க்கும், சேய்க்கும் பல பிரச் சினைகளை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் 20ஆவது வாரத்தின்போது ப்ரீ கிளம்ப்சியா பிரச்சினை ஏற்படு கிறது. இது அரிதான பிரச்சினை. எல்லா கர்ப் பிணிக்கும் வராது. இந்நிலை கொண்டிருக்கும் கர்ப் பிணிக்கு அதிக இரத்த அழுத்தம், தலைவலி, சிறுநீரக பிரச்சனை , கல்லீரல் பிரச்சினை, திடீர் எடை அதி கரிப்பு போன்ற அறிகுறி தென்படலாம்.

எனினும் அறிகுறியை கண்டு உடனடியாக சிகிச்சை செய்தால் இது எளிதில் சரிசெய்யக் கூடிய பிரச்சினையே. குழந்தை பிறந்த 2 மாதத்திலேயே இந்தப் பிரச்சினை சரியாகி விடும் ப்ரீக்ளாம்ப்சியா கொண்டிருக்கும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இள வயது வயது கர்ப்பிணிகள் 40 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் பல்வேறு முறை கர்ப்பம் தரித்தவர்கள் உடல் எடை அதிகம் கொண்டோர்  ஏற்கெனவே அதிக இரத்த அழுத்தம் அல்லது சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் அபாய காரணிகளில் இருப்பவர்கள்.

​மருத்துவரை எப்போது அணுகுவது

அவ்வப்போது இரத்த அழுத்தத்தைப் பரி சோதித்துக் கொள்வது மட்டுமே கண்டறிவதற்கான வழி என்று சொல்லலாம். உயர் இரத்த அழுத்தம் வந்த பிறகு வீட்டிலேயே நாம் அதை கண்காணிக்க அதற்கான கருவி வாங்கி வைத்துகொள்ளலாம். அதில் வித்தியாசம் தெரிந்தால் உடனடியாக டாக் டரை அணுகலாம். உடலில் வித்தியாசமான அறிகுறி தெரிந்தாலும் கூட மருத்துவரை அணுகி பரிசோ தித்துக் கொள்வது நல்லது.

உயர் இரத்த அழுத்தம் எப்போதெல்லாம் வரும்?

யாருக்கெல்லாம் வரும்?

மருத்துவரை எப்போது அணுகுவது

அவ்வப்போது இரத்த அழுத்தத்தைப் பரி சோதித்துக் கொள்வது மட்டுமே கண்டறிவதற்கான வழி என்று சொல்லலாம். உயர் இரத்த அழுத்தம் வந்த பிறகு வீட்டிலேயே நாம் அதை கண்காணிக்க அதற்கான கருவி வாங்கி வைத்துகொள்ளலாம். அதில் வித்தியாசம் தெரிந்தால் உடனடியாக டாக் டரை அணுகலாம். உடலில் வித்தியாசமான அறிகுறி தெரிந்தாலும் கூட மருத்துவரை அணுகி பரிசோ தித்துக் கொள்வது நல்லது.

​இரத்த அழுத்தத்தை தவிர்க்க பெண்கள் செய்ய வேண்டியது என்ன

தினசரி 45 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியை வாரத்துக்கு 5 நாட்கள் செய்ய வேண்டும். சீரான இடைவெளியில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை திட்டமிட்டு எடுத்துகொள்ள வேண்டும். குறிப்பாக அதிக கொழுப்பு நிறைந்த உண வுகளை தவிர்த்து குறைந்த கொழுப்பு உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை மருத் துவரை சந்திக்கும் போதும் பரிசோதனை செய்வது நல்லது.

No comments:

Post a Comment