‘ஒரே நாடு ஒரே தேர்வு’ நிலைப்பாடு பன்முகத்தன்மையை மறுக்கிறது கேரள முதலமைச்சர் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

‘ஒரே நாடு ஒரே தேர்வு’ நிலைப்பாடு பன்முகத்தன்மையை மறுக்கிறது கேரள முதலமைச்சர் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம், ஆக.23- ‘ஒரே நாடு ஒரே தேர்வு’ என்ற பாஜக  அரசின் நிலைப்பாடு பிரதேச வேறுபாடு மற்றும் தேவைகளை கருத்தில் கொள்ளாமல் உள்ளது என நிஷாகந்தியில் எஸ்.எப்.அய். தெற்கு மண்டல அணி வகுப்பு நிறைவு விழாவை தொடங்கி வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜ யன் கூறினார். 

பல்வேறு கல்வி நிறுவனங் களில் சேர்க்கைக்காக அனைத்து மாநிலங்க ளுக்கும் ஒரே தேர்வை நடத்துவது கடு மையான தோல் விக்கு வழி வகுப்பதை பார்க் கிறோம். இதுபோன்ற தேர்வு களால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து எஸ்எப்அய் எச்சரித் தாலும், ஒரே தேர்வு போதும் என்ற நிலைப்பாட்டில் ஒன்றியம் தொடர்கிறது. பிரதேச பன்முகத் தன்மை மற்றும் தேவைகளைப் புறக்கணிக்கும் இத்தகைய தேர் வுகள், நன்மையை விட தீமை யையே அதிகம் செய்கின்றன. மத்திய பல்கலைக் கழகங்களுக்கு நடத்தப்படும் ‘சியூஇடி’ பொதுத் தேர்வு, பிரச்சினைகளால் பல இடங்களில் ஒத்திவைக்கப்பட் டுள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள் கையின் மூலம், கல்வித் துறையில் பாகுபாட்டையும், காவிமய மாக்கலையும் ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டில்  மூடப்படும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதி கரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 5000 பள்ளிகள் மூடப்பட்டன. தனி யார்  துறையில் 12,000 பள்ளிகள் திறக்கப் பட்டன. ஒரு வருடத்தில் உயர்கல்வித் துறையில் 19,000 இடங்களை இந்த  மய்யம் குறைத் துள்ளதாக மதிப்பிடப்பட் டுள்ளது. இலவச பொதுக் கல்விக்கான வாய்ப்பை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் பின் பற்றிய கொள்கைகள் பாஜக  ஆட்சியில் இன்னும் தீவிரமாக செயல்படுத்தப் பட்டு வருகிறது.

அதே நேரத்தில், கடந்த ஆறு ஆண்டு களில் அரசு பொதுக் கல்வியில் கேரளம் பெரும் முன் னேற்றம் கண்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் இருந்து இடைநிறுத் தப்படும் குழந்தைகளின் பழைய முறை முடிந்துவிட்டது. 10 லட் சத்துக்கும் மேற்பட்ட குழந் தைகள் அரசுப் பள்ளி களுக்குச் சென்றுள்ளனர். உயர்கல்வித் துறையிலும் சீர்திருத் தங்கள் விரைவில் தொடங்கும். அரசு நியமித்துள்ள உயர்கல்வி சீர்தி ருத்த ஆணையத்தின் பரிந் துரைகள் செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்படும் என முதல மைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.


No comments:

Post a Comment