பெண்களுக்குச் சம உரிமை தந்த நதிக்கரை நாகரிகங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

பெண்களுக்குச் சம உரிமை தந்த நதிக்கரை நாகரிகங்கள்

தொடர்ந்து பல கலாச்சார படை எடுப்பு களாலும் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் சூழ்ச்சியாலும் சிந்துநதி முதல் தாமிரபரணி வரை பரவியிருந்த திராவிட நாகரிகத்தை திரித்துக்காட்டி யுள்ளனர். ஆனால் அன்றைய நாகரிகத்தின் அடையாளங்களான எகிப்து நாகரிகம் பெண்களுக்கு சம உரிமைகள் தந்தது. இதுவே திராவிட நாகரிகத்தின் பெருமை களுக்கு ஓரு அடையாளமாக உள்ளது. 

பெண்களுக்குச் சம உரிமை

நைல் நதிக்கரை நாகரிகம் இருந்த எகிப்தில், ஆண்களும் பெண்களும் சட்டத் தின் பார்வையில் சமமாக நடத்தப்பட்டனர். இதன் பொருள் என்னவென்றால் பெண்கள் சொத்துக்களை வைத்திருக்கலாம், வாங் கலாம், விற்கலாம், வாரிசுரிமை மூலம் பெறலாம். அவர்கள் ஆண் பாதுகாவலர்கள் பாதுகாப்பின்றி வாழலாம். கணவரை இழந்தால் அல்லது விவாகரத்து செய்திருந் தால், தங்கள் சொந்த குழந்தைகளை அவர் களே வளர்த்துக் கொள்ளலாம். பெண்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுக் கலாம்.

பண்டைய எகிப்தில் உள்ள அனை வரும் திருமணம் செய்து கொள்ள வேண் டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மனைவி, 'வீட்டின் எஜமானி', வீட்டு விஷயங்கள் அனைத்துக்கும் பொறுப்பாக இருந்தார். அவர் குழந்தைகளை வளர்த்து குடும் பத்தை நடத்தினார். 

பெண்கள் நாட்டை ஆட்சி செய்யலாம்

அரசனின் வாரிசு இளவரசன் தான் மன்னராவான் என்ற முறை எகிப்தில் இருந்த போதிலும் அங்குபெண்களுக்கும் ஆட்சி அதிகாரம் பெற வாய்ப்புக் கிடைத் தது. எகிப்திய வரலாற்றில் பல சந்தர்ப்பங் களில் பெண்கள் முடியை ஏற்றனர். முழுக்க முழுக்க பினாமியாக இல்லாமல் தானே அனைத்து அதிகாரங்களையும் வைத்து ஆட்சி செய்தனர்.  இந்த பெண் ஆட்சி யாளர்களில் மிகவும் வெற்றிகரமானவராகக் கருதப்படும் ஹட்செப்ஸுட், 20 ஆண்டுகளுக் கும் மேலாக எகிப்தை ஆட்சி செய்தார்.

வரலாற்றில் எகிப்தில் சகோதர-சகோதரி திருமணம் குறித்த பதிவுகள் இருக்கிறது இருப்பினும், சகோதர-சகோதரி திருமணங் கள் ஒருபோதும் கட்டாயமாக்கப்பட வில்லை. அரச குடும்பத்திற்கு வெளியே இத்தகைய திருமணங்கள் பொதுவாக இல்லை. சகோதரி மனைவியாகிவிட்டால் அவரைக் குறிக்க பிரத்தியேக சொல் பயன் படுத்தப்பட்டது.

எகிப்து அதன் பெரிய பிரமிடுகள், உள்ளே வைக்கப்பட்டிருக்கும் மம்மிகள் மற்றும் அதன் தங்க புதையல்களுக்காக மிகவும் பிரபலமானது. வம்சயுகத்தின் இறுதி வரை ஒட்டகம் எகிப்தில் தொடர்ந்து பயன்படுத்தப்படவில்லை. மாறாக, எகிப்தி யர்கள் கழுதைகளை சுமக்கும் மிருகங் களாகவும், படகுகளை மிகவும் வசதியான போக்குவரத்து வழிமுறையாகவும் பயன் படுத்தினர்.

நைல் நதி அவர்களின் வளமான நிலத் தின் மய்யத்தில் பாய்ந்து, ஒரு இயற்கையான நெடுஞ்சாலையை உருவாக்கியது. தெற்கி லிருந்து வடக்கு நோக்கிச் செல்ல வேண் டியவர்களுக்கு நீரோட்டம் உதவியது. அதே நேரத்தில் காற்று எதிர்த் திசையில் பயணம் செய்ய விரும்புவோரின் வாழ்க் கையை எளிதாக்கியது. பிரிட்டன் மக்களின் மரபணுவை மாற்றிய பழங்கால புலம் பெயர்வு: எலும்புக்கூடுகள் வெளிக்காட்டிய சுவாரஸ்யம் கால்வாய்கள் மூலம் நதி யோரக் குடியிருப்புகள், குவாரிகள் மற்றும் கட்டுமான தளங்களுடன் இணைக்கப்பட் டன. தானியங்கள் மற்றும் தானியத் தொகுதிகளை கொண்டு செல்ல பெரிய மரத் தோணிகள் பயன்படுத்தப்பட்டன.

 பிரமிடுகள் அடிமைகளால் கட்டப்படவில்லை

கிரேட் பிரமிட் எனப்படும் மிகப் பெரிய பிரமிட் ஒரு லட்சம் அடிமைகளால் கட் டப்பட்டது என்று பண்டைய வரலாற் றாசிரியர் ஹெரோடோடஸ் நம்பினார். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் கடுமையான சூழ்நிலைகளில் கடுமையாக உழைக்கும் அவரது கருத்து நவீன திரைப்பட தயாரிப்பாளர்களிடையே குறிப்பிடத்தக்க வகையில் இன்றும் பிரபலம்.

ஆனால் உண்மையில் 5,000 நிரந்தர, ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 20,000 தற்காலிக பணியாளர்களால் பெரிய பிரமிட் கட்டப்பட்டது என்று தொல் பொருள் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த தொழிலாளர்கள் அடிமைகள் அல்லர். மூன்று அல்லது நான்கு மாத கால அளவில் பணிபுரிந்தனர். அவர்கள் பிர மிடுக்கு அருகிலுள்ள ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, பானம், மருத்துவக் கவனிப்பு போன்றவை வழங்கப்பட்டன. பணியில் இறந்தவர்கள் அருகேயுள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டனர். 

 பெண்களுக்கு உரிமை, தொழிலாளர் நலம், மக்கள் நலனில் அக்கறை, சரியான வரிவிதிப்பு, நாட்டின் வளர்ச்சியில் கவனம் போன்றவை நைல் நதிக்கரை நாகரிகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப் படுகிறது. அக்காலகட்டத்தில் நதிக்கரை நாகரிகங்கள் ஒன்றிலிருந்து ஒன்று கலாச் சாரம் உள்ளிட்டவைகளை கற்றுக்கொண்டது. 

எகிப்துநாகரிகத்திற்கும் முன்பாக வைகை பெருமை நாகரிகம், சிந்துச்சமவெளி நாகரி கம் போன்றவை உலகிற்கே சமத்துவத்தை யும், உரிமையையும் கற்றுக்கொடுத்தவை களாக திகழ்கின்றன - இதற்கு எகிப்து பெரும் எடுத்துக்காட்டாக உள்ளது.

No comments:

Post a Comment