ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை, 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை அம்மாநில அரசு பொது மன்னிப்பு என்ற பெயரில் விடுதலை செய்திருப்பது பெரும் சர்ச்சை யாகி உள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் பிரத மரை கடுமையாக விமர்சித்துள்ளன.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

தமிழ் நாடு வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் நிதி உதவியை கோரி பிரதமர் சந்திப்பு. கொள்கை அடிப்படையில் எந்த காலத்திலும் திமுக பாஜகவோடு உறவு இல்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.

தி ஹிந்து:

காந்தியைக் கொன்றவர்கள் மதச்சார்பின்மையை அழிக்கப் பார்க்கிறார்கள்; சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அரசமைப்பு மதிப்புகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என அரசமைப்பின் சிறப்புகள் கருத்தரங்கில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

கட்சி அலுவலகங்களுக்கு முறைகேடாக சம்பாதித்த பணத்தை கொண்டு செல்ல துணை ராணுவப் படையின ரையும், காவல்துறையையும் பாஜக தவறாக பயன்படுத்து கிறது என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பகிரங்க குற்றச்சாட்டு.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment