மறுபிறவி மூடநம்பிக்கையால் தீக்குளித்த கல்லூரி மாணவர் பரிதாப சாவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

மறுபிறவி மூடநம்பிக்கையால் தீக்குளித்த கல்லூரி மாணவர் பரிதாப சாவு

துமகூரு,ஆக.13 கருநாடக மாநிலத்தில் மீண்டும் மறுபிறவி யாக பிறக்கலாம் என்கிற மூடநம்பிக்கை காரணமாக தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த அவலம் நடந்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:- கருநாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிரா மத்தை சேர்ந்தவர் ரேணுகா பிரசாத் (வயது 22). பி.யு.சி. 2-ஆம் ஆண்டு மாணவரான இவருக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். அந்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல தன்னை பாவித்துக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் சமீப காலமாக அனுஷ்கா நடிப்பில் வெளியாகி இருந்த அருந்ததி திரைப்படத்தை ரேணுகா பிரசாத் பார்த்து வந்து உள்ளார். மறுபிறவி எடுத்து விடலாம்... அந்த படத்தில் அனுஷ்கா தனது தலையில் தேங்காய்களால் அடித்து உயிரை மாய்த்து கொள்வார். பின்னர் அனுஷ்கா மறுபிறவி எடுத்து வரும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த நிலையில் அனுஷ்காவை போல உயிரிழந்து மறுபிறவி எடுத்து விடலாம் என்று கருதிய ரேணுகா பிரசாத் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து உள்ளார். 

இதில் உடல்கருகி அவர் உயிருக்கு போராடினார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் ரேணுகா பிரசாத் உயிரிழந்து விட்டார். இந் நிகழ்வு குறித்து மதுகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்கு ளித்த வாலிபர் உயிரிழந்த நிகழ்வு கருநாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

 மறுபிறவி  மூடநம்பிக்கையால்   ரேணுகா பிரசாத் மண் எண்ணெய் ஊற்றி தீக்கு ளித்து உயிருக்கு போராடினார். அவ ரது நிலையை கண்டு தந்தை கண்ணீர் விட்டு அழுதார். அப்போது ரேணுகா பிரசாத் தனது தந்தையிடம் எனக்கு முக்தி கொடுங்கள், முக்தி கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டார். அப்போது கண்ணீர் விட்டு அழுத தந்தை, ரேணுகா பிரசாத்திடம் நான் உன்னை அருந்ததி படம் பார்க்க வேண் டாம் என்று கூறினேன். 

நீ கேட்கவில்லை என்று கூறிய துடன், நான் எப்படி உனக்கு முக்தி கொடுக்க முடியும் என் றும் கூறினார். இந்த உரையாடல் காட்சிப்பதிவு சமூக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளது.


No comments:

Post a Comment