ஆதிச்சநல்லூரில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

ஆதிச்சநல்லூரில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிப்பு

திருப்புவனம், ஆக. 10- ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணியின்போது தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப் பட்டது. வெண்கல, இரும்பு பொருட் களும் கிடைத்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லி யல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் தங்கத்தாலான காதணி கண்டுபிடிக்கப்பட்டது. 8.8.2022 அன்று இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் தங்கத்தால் செய்யப்பட்ட 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது.

வெண்கல ஜாடி ஒன்றும் இருந் தது. அந்த ஜாடியைச் சுற்றி 5 இடங் களில் கொக்கு, வாத்து போன்ற பறவைகள் நீர் அருந்துவதுபோல் அலங்காரங்கள் இருந்தன. அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத் தால் ஆன 2 வடிகட்டி, 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1 சூலம், தொங் கட்டான் உள்ளிட்ட 20 இரும்பு பொருட்களும் இருந்தன.

1902இல் ஆங்கிலேய அதிகாரி யான அலெக்சாண்டர் ரியா இங்கு அகழாய்வு செய்தபோது தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. 120 ஆண்டு களுக்கு பிறகு அதுபோல் மீண்டும் தங்க நெற்றிப்பட்டயம் கிடைத்து உள்ளது.

கீழடியில்..

இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் ஒரே முது மக்கள் தாழியில் 74 சூதுபவளங்கள் (அரிய வகை கல்) கண்டெடுக்கப் பட்டன.

கீழடி அருகே கொந்தகை பகுதி ஈமக்காடு என்பதால், அங்கு தொடர்ந்து முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

கொந்தகையில் முதன்முறையாக ஒரே முதுமக்கள் தாழியில் 74 சூது பவளங்கள், ஒரு செப்புத் துண்டு கிடைத்தது. சூதுபவளம் ஓர் அரிய வகை கல் ஆகும். பழங்காலத்தில் இந்தக் கல் மதிப்பு மிக்கதாகக் கரு தப்பட்டது. இந்த வகை கற்களால் தயாரிக்கப்பட்ட அணிகலன்களை மன்னர்கள், அரசின் முக்கிய பிர முகர்கள், செல்வந்தர்கள் அணிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக் கது.

இறந்தவர்களுடன் அணிகலன் களையும் வைத்து புதைக்கும் வழக்கம் பழங்காலத் தமிழர்களிடம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment