தேசியக் கொடி கட்ட முயன்ற பத்து பேர் மரணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

தேசியக் கொடி கட்ட முயன்ற பத்து பேர் மரணம்!

ராஞ்சி, ஆக. 17- ஜார்க்கண்ட் டில் மழை பெய்த போது மொட்டை மாடியில் தேசி யக் கொடியை ஏற்றிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் காங்கே பகுதியை சேர்ந்த குடும்பத்தினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். அங்கு விஜய் ஜா என்பவரின் அரிசி ஆலையின் மொட்டை மாடிக்கு அருகில் உயர் அழுத்த மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. 

அந்த கம்பத்தின் அருகே, விஜய் ஜாவின் குடும்பத்தினர் தேசியக் கொடியை கட்ட முயன்ற னர். அப்போது எதிர்பா ராதவிதமாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து, ஆர்த்தி ஜா (26), புஜா ஜா (25), வினீத் ஜா (23) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். தகவலறிந்த காங்கே காவல்துறையினர், சம்ப வம் நடந்த வீட்டிற்கு வந்து மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கின்றனர்.

 இதுகுறித்து காங்கே காவல்துறை அதிகாரி பிரிஜ் கிஷோர் கூறுகை யில், ‘மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வினீத் ஜா மற்றும் பூஜா ஜா ஆகிய இருவரும் விஜய் ஜாவின் குழந்தைகள் ஆவர். உயிரி ழந்தவர்களில் மற்றொரு வரான ஆர்த்தி ஜா, விஜய் ஜாவின் தம்பி சிவகுமார் ஜாவின் மகள் ஆவார்.  உயிரிழந்த மூன்று பேரும் தங்களது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று தேசிய கொடியை ஏற்ற முயன்றனர். அப் போது லேசான மழை தூறல் மற்றும் அதிக காற்றும் வீசியுள்ளது. எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மூன்று பேரும் பலியா  கினர். 

இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் என மூன்று பேரும் மின்சாரம் தாக்கி இறந்ததால், வீட் டினர் பெரும் சோகத்தில் உள்ளனர்’ என்றார்

 இதே போல் வீட்டுக்கு வீடு தேசியக்கொடி என்ற மோடியின் பேச்சால் போபால், ஜான்சி மற்றும் ராயப்பூர் போன்ற நகரங் களில் தேசியக்கொடியை கட்ட முயன்ற போது மின்சாரம் பாய்ந்தும், பைக்கில்  வேகமாக சென்றுகொண்டு இருந்த போதும், பைக்கின் முன் னால் கட்டியிருந்த தேசி யக்கொடி முகத்தை மறைத்த போது நிலைதடுமாறி எதிரேவந்த தண்ணீர் லாரி மீது மோதியும், உய ரமான டவரில் தேசியக் கொடி ஏற்ற முயன்று கால்தவறி கீழேவிழுந்தும் மொத்தம் 10 பேர் வரை இறந்துள்ளனர்

பணமதிப்பிழப்பு, கரோனா முழு அடைப்பு போன்ற அறிக்கைகளை அதன் சாதக - பாதகங்களைக் ஆய்வு செய்யாமல் அறிவித்து, இது குறித்த எச்சரித்த கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களை பதவியிலிருந்து தூக்கியும் உத்தரவிட்டார்.   இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணம டைந்தனர். அதன் தொடர்ச் சியாக வீட்டுக்குவீடு தேசி யக்கொடி என்ற திட்ட அறிவிப்பாலும் பலர் மர ணமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment