காமன்வெல்த் போட்டிகள்: மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

காமன்வெல்த் போட்டிகள்: மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். 72 நாடுகள் பங்கேற் றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட் டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நக ரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 16 தங்கம், 12 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களை வென்றுள்ளது. குத்துச்சண்டையில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, 

மேலும் மகளிர் ஆக்கிப் போட்டியில் இந்திய அணி வெண்கலம், மும்முறை தாண் டுதலில் 2 பதக்கம் என அசத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று (8.8.2022) நடைபெற்ற பெண் களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இறுதி போட்டியில் அவர் 60 மீ தூரம் ஈட்டி வீசி வெண்கலம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

பேட்மிண்டன் போட்டி: பி.வி சிந்து தங்கம் வென்றார்

காமன்வெல்த் விளையாட்டின் பேட் மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று தங்கம் வென்றார். பதக்கப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. 

இறுதிப்போட்டியில் கனடா வீராங் கனையை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக் கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த் போட்டியில் பிவி சிந்து தங்க பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.



No comments:

Post a Comment