செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

செய்தியும், சிந்தனையும்....!

எங்களப்பன் குதிருக்குள் இல்லை

* மூட அரசியல் தனத்தை சட்டப்படி அடக்குவோம் என்ற முதலமைச்சர் கூற்றுக்கு பி.ஜே.பி. அண்ணாமலை எதிர்ப்பு.

>> மூட அரசியல் என்றால், இவர்களுக்கு ஏன் கோபம் - ஓகோ அதை நடத்துவது அவர்கள்தானோ!

எது முக்கியம்?

* ரத்ததானம் செய்தால் ஏழுமலையான் சிறப்புத் தரிசனம்.

>> தரிசனத்தைவிட ரத்த தானம் முக்கியம் - ஒப்புக் கொண்டதற்குப் பாராட்டு.

என்ன அக்கறையோ?

* கடல் பகுதியைக் கண்காணிக்க இலங்கைக்கு இந்தியா இலவச விமானம்.

>> தமிழ்நாட்டு மீனவர்களை இன்னும் வேகமாகக் கைது செய்யவா?

No comments:

Post a Comment