'விடுதலை' பணி முடிப்போம், தோழர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

'விடுதலை' பணி முடிப்போம், தோழர்களே!

கவிஞர் கலி.பூங்குன்றன்

பொறுப்பாசிரியர், 'விடுதலை'

அருமைத் தோழர்களே!

தமிழ்நாட்டில் வெளிவரும் மூத்த நாளேடுகளில் ‘விடுதலை' முக்கியமானது.

பழைமைவாதங்களை எதிர்த்ததோடு மட்டுமல்லா மல், ஆட்சிகளையும், அடக்குமுறைகளையும் எதிர்த்து தன் வீராவேசத்தைக் காட்டி வந்துள்ளது.

ஆட்சிகளை எதிர்த்துக் கொண்டிருந்தபோதும், கொள்கைக்கு உடன்பாடானவை, நாட்டுக்கு நலன் பயக்கும் செயற்பாடுகள் என்று வந்தால், எதிரிக்கட்சியாக நடந்துகொள்ளாமல், மனந்திறந்து பாராட்டி வருவது ‘விடுதலை'க்கே உரித்தான தனிச் சிறப்பு!

அதேபோல, ஆட்சியை ஆதரித்துக் கொண்டி ருக்கும்போதே கூட கொள்கைக்கு எதிரானது என்றால், நாட்டு மக்களுக்கு ஊறுவிளைவிப்பது என்றால் எதிர்க்கவும் தயங்குவதில்லை - இதுவும் கழகத்திற்கும்,  ‘விடுதலை'க்கும் உரித்தான உயர்பண்பு நலன்கள்.

அரசு நூலகங்களுக்கு ‘விடுதலை' ஆட்சி ஆதரவு - எதிர்ப்பு அடிப்படையில் மாறி மாறி வருவதும் வாடிக்கை.

என்றாலும், ‘விடுதலை' தன் வீறுநடையைக் குறைத்துக் கொண்டதில்லை.

ஒருமுறை - எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மானமிகு துரைமுருகன் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நோக்கி சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

‘‘எதிர்க்கட்சி ஏடுகளையெல்லாம் நூலகங்களில் தடை செய்துவிட்டீர்கள். ‘விடுதலை' நாளேட்டையுமா தடை செய்யவேண்டும்?'' என்று கேட்டதுண்டு.

அதேபோல, எம்.ஜி.ஆர். ஆட்சியில், சிறைச்சாலை களுக்குப் போடப்பட்டு வந்த ‘விடுதலை' நிறுத்தப் பட்டது.

அதனை எதிர்த்து நமது ‘விடுதலை' ஆசிரியர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக் கொன்றைத் தொடுத்தார்.

உடனே, எம்.ஜி.ஆர். அரசு, சிறைச்சாலைகளில் ‘விடுதலை' போடப்படலாம் என்று ஆணை பிறப்பித்த காரணத்தால், அந்த வழக்கைத் திரும்பப் பெறுமாறு நீதிபதி கேட்டுக்கொண்டதன் பேரில் வழக்குத் திரும்பப் பெறப்பட்டது.

இப்படி தடைக் கற்களைத் தாண்டித் தாண்டியே ‘விடுதலை' வந்துள்ளது.

இந்த நிலையில் நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 50 ஆண்டு ‘விடுதலை' ஆசிரியர் பணியையொட்டி 50 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களைத் திரட்டித் தந்தோம்.

இப்பொழுது 60 ஆண்டுப் பணி என்னும் உலக சாதனையை நிகழ்த்திய ஆசிரியருக்கு 60 ஆயிரம் சந்தாக்களை அளித்து சரிதம் படைக்கவிருக்கிறோம்.

செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் விழாவில் ‘விடுதலை'  சந்தாக்களை வழங்குவோம் - விரைந்து பணியாற்றுவோம்!

கருஞ்சட்டைத் தேனீக்களே! இடையில் சில நாட்கள்தான் - பறந்து பறந்து பணியாற்றுவீர் - பணியாற்றுவோம்!

உங்களின் உழைப்பை வரலாறு தன் உச்சத்தில் வைத்துப் புகழும். 

தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியாரின் பணி முடிப்போம்! பணி முடிப்போம்!!

No comments:

Post a Comment