முதல் இரு வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

முதல் இரு வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது

சென்னை, ஆக.18 பள்ளிகளில், 1, 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கெனவே இதுதொடர்பான  உயர்நீதிமன்ற உத்தரவை சரியாக கடைப்பிடிக்க வேண் டும் என அறிவுறுத்தி உள்ளது.

கல்வித்துறை தொடர்பான வழக்கின் விசாரணையின்போது,  ஏற்கெனவே உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளபடி, 1, 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது என்பதால், இதை உறுதி செய்ய, பிரத்யேக குழு அமைத்து, பள்ளிகளில் ஆய்வு செய்ய, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், சில தனியார் பள்ளிகள், மாணவர்களின் வயது, கற்றல் திறனுக்கு அதிகமாக வீட்டுப்பாடம் அளிப்பதாக புகார் எழுந்தது

இதையடுத்து, தற்போது பள்ளிக் கல்வித்தறை, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், நீதிமன்ற உத்தரவுபடி 1, 2ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது என்றும், எண்ணும் _ எழுத்தும் திட்டம் செயல்படுவதால், வகுப்பறை களிலே செயல் திட்டங்கள் மேற்கொள் ளப்படு கின்றன.  மேலும்,  பள்ளிகளை பார்வையிட வட்டாரக் கல்வி அலுவ லர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .’நடப்புக் கல்வியாண்டு துவங்கியதில் இருந்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பள்ளிகள் விபரம், மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் நிலை, வீட்டுப்பாடம் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய் யப்பட்டுள்ளது.  இதை தொகுப்பறிக் கையாக உருவாக்கி இயக்குநரகத்திற்கு அனுப் பப்பட்டுள்ளது.  மேலும், இந்த ஆய்வு தொடர்ச்சியாக, இனிவரும் காலங் களில் நடத்தப்படும்’ என தெரிவிக்கப் பட்டு உள்ளது.


No comments:

Post a Comment