தேசியக் கொடி ஏற்றும் உரிமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

தேசியக் கொடி ஏற்றும் உரிமை

ஏறத்தாழ அய்ம்பது ஆணடுகளுக்கு முன்பே இந்திய தேசியக் கொடியை முதலமைச்சர்கள் ஏற்றும் உரிமையை மாநிலங்களுக்கு பெற்று தந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

'மணிவாசகர் படிப்பகத்தின் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை ந.முடி.கோபதி அவர்களின் நூலில் 21ஆம் பக்கத்தில் இருப்பது)

1947ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றது.

ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு மேலாக கோட்டை கொத்தளத்தில் பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் கொடிக்கு பதிலாக இந்திய தேசியக் கொடி ஆளுநர் சர். ஆர்ச் போல்ட்ரை அவர்களால் பறக்க விடப்பட்டது.

அதற்கு அடுத்த ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று ஆளுநர் இக்கொடியை பறக்க விடுவது வழக்கமாக இருந்தது.

1973ஆம் ஆண்டு வரை இம்முறை பின்பற்றப்பட்டது.

கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், முதலமைச்சர் பொறுப்பில் இருந்த போது பிரதமர் இந்திராகாந்தி அவர்க ளுடன் போராடி, தேசிய அபிவிருத்தி கவுன்சிலிலும் வாதாடி, சுதந்திரத் திருநாளில் டில்லி செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றுவது போன்று, மாநிலங்களிலும் தலைமைச் செயலகங்களில் முதலமைச்சர்களே கொடி ஏற்ற வேண்டும் என்றும் ‘மண் மீட்க எழுந்த போராட்டத்தின் முடிவில் வெற்றிக் களிப்புடன் விண் முட்டப் பறந்து பட்டொளி வீசிடும் இந்திய தேசியக் கொடியை மக்களின் தேர்ந்ªடுக்கப்பட்ட மாநில முதலமைச்சர்கள்தாம் இந்த நாளில் ஏற்றி வைக்க வேண்டும்" என்று உரிமைக் குரல் எழுப்பினார். அதில் வெற்றியும் பெற்றார்.

அவ்வெற்றியின் முகத்தான் 1974ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15ஆம் நாள் கோட்டை கொத்தளத்தில் இந்திய தேசியக் கொடியை முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஏற்றியதோடன்றி மற்ற முதலமைச்சர்களுக்கும் அவ்வுரிமையினைப் பெற்றுத் தந்து பெருமை பெற்றார்.

- தகவல்: க.பழநிசாமி

(‘விடுதலை',ஞாயிறு மலர் 22.12.2012, ப. 3)


No comments:

Post a Comment