உதய் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்குத் தொல்லை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

உதய் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்குத் தொல்லை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை, ஆக. 21- இந்தியா அனை வருக்குமான நாடு என்ற கோட் பாட்டை வலியுறுத்தி அகில இந் திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவரும் மக்களவை உறுப்பினரு மான ராகுல்காந்தி செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் தொடங்க இருக்கிறார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தை தொடர்ந்து மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, 

மின் வினியோகம், மின்சார கொள்முதல் பிரச்சினையில் முதல-மைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையிலான அரசுக்கு பொருளா தார ரீதியான சிரமத்தை கொடுப் பதற்காக பா.ஜ.க. உதய் திட்டத்தை பெரிதுபடுத்துகிறது. உதய் திட் டத்தை அலுவல் ரீதியான சீர்திருத் தம் என்று ஆரம்பித்து மின் கட் டணத்தை மக்கள் மத்தியில் திணிப் பதற்கான முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. இலவச மின்சாரம் தவறு என்று பிரதமர் கூறுவது மிகவும் தவறான ஒன்று. விவசாயம், கல்வி போன்ற துறை களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் என்பது ஒருவகையான முதலீடு தான். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிற்கு செய்யப் படும் செலவு என்பது அத்தியா வசியமானது. ராகுல்காந்தி பா.ஜ.க. அதிகாரத்திற்கு எதிராக போராடி வருகிறார். செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல்காந்தி தமிழ்நாடு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ள நடைபய ணத்தில் பங்கேற்க இருக்கிறார். பா.ஜ.க. அரசின் ஜனநாயக துரோக செயலுக்கு எதிராகவும், அதிகாரத் தில் உள்ளவர்களின் மக்கள் விரோத போக்கை எதிர்த்தும் இந்த பேரணி நடைபெற உள்ளது. 

-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment