புதுடில்லி, ஆக.13- டில்லியில் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவ தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டில்லி காவல் துறையின் தரவுகள் அடிப்படையில் இந்த ஆண்டு (ஜனவரி 1) தொடக்கம் முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு;-
கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை ஒப்பிடும்போது இந்த ஆண்டு டில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. டில்லியில் தினமும் சராசரி யாக 6 பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் பதிவாகு கிறது. பெண்கள் மீதான தாக்குதல் நிகழ்வுகள் 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கணவர், கணவரின் குடும்ப உறுப்பினர்கள் பெண்கள்மீது குடும்ப வன்முறையில் ஈடுபடு வது 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை டில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 7 ஆயிரத்து 887 வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 6 ஆயிரத்து 747 வழக்குகளை விட அதிகமாகும். இந்த ஆண்டு ஜூலை 15 வரை டில்லியில் 1,100 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் பதியப்பட்ட 1,033 பாலியல் வன்கொடுமை வழக்குகளை விட அதிகமாகும். கணவர், கணவரின் குடும்ப உறுப்பினர்கள் பெண்கள் மீது குடும்ப வன்முறையில் ஈடுபடு வது தொடர் பாக 2 ஆயிரத்து 704 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் பதிவான 2 ஆயி ரத்து 96-அய் விட சற்று குறைவாகும். வரதட்சனை கொண்டு தொடர்பாக 69 மரணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் டில்லி காவல்துறை தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment