உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு

புதுடெல்லி, ஆக.28 பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் முன்னிலை யில், உச்ச நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நேற்று (27.8.2022) பதவி யேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

2021 ஏப்ரல் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப் பேற்றார். அவர் நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார்.

இதையடுத்து, குடியரசுத் தலை வர் மாளிகையில் நேற்று (27.8.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக் கொண்டார். அவ ருக்கு, குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மேனாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நசீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேனாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரையின் பேரில், யு.யு.லலித்தை, உச்ச நீதி மன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உத்தர விட் டார்.

வழக்குரைஞராக இருந்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்ட ஒருவர், தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற 2ஆவது நபர் என்ற பெருமை இவ ருக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன், இதுபோன்ற பெருமையை முதல்முறையாகப் பெற்றவர் நீதி பதி எஸ்.எம்.சிக்ரி. இவர், 1971இல் உச்ச நீதிமன்றத்தின் 13ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற் றார்.

தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறும்போது, “வழக்குகள் பட்டிய லிடப்படும் விவகாரத்தில், எளிமை, தெளிவு மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகிய 3 முக்கிய அம்சங்க ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

உச்ச நீதிமன்றத்தில் குறைந்த பட்சம் ஓர் அரசியல் சாசன அமர்வு ஆண்டு முழுவதும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அவசர வழக்குகளைப் பட்டியலிடுவதில், வழக்குரைஞர்களுக்கும், பதிவு அலுவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், இதற்கென தனி அமைப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment