வெறுப்புப் பேச்சை உற்பத்தி செய்து பரப்பும் இணையதள பின்னல் அமைப்பை செயலிழக்கச் செய்ய வேண்டியது மிக மிக அவசியமும் அவசரமானதும் ஆகும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

வெறுப்புப் பேச்சை உற்பத்தி செய்து பரப்பும் இணையதள பின்னல் அமைப்பை செயலிழக்கச் செய்ய வேண்டியது மிக மிக அவசியமும் அவசரமானதும் ஆகும்

கலின் கான்ஸ்வேவ்ஸ்

நபிகள் நாயகம் பற்றி இழிவான கருத்தை வெளியிட்ட பா.ஜ.க.வின் மேனாள் தேசிய செய்தித் தொடர்பாளர், நுபுர் சர்மாமீது நீதித்துறை தெரிவித்த கடுமையான கண்டனத்துக்கு எதிர்ப்பைத் தெரி விக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலுள்ள மக்கள் இருக்கின்றனர் என்ற எண்ணத்தை - உச்சநீதிமன்ற நீதிபதி மீது பா.ஜ.க.வின் தகவல் தொழில் நுட்பப் பிரிவினர் மேற்கொண்ட கோபா வேசம் கொண்ட தாக்குதல் தருகிறது. அவ்வாறு கூறுவதைவிட, அந்த நீதிபதியினைப் போன்ற உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் - வெறுப்புப் பேச்சு உற்பத்தி செய்து பரப்புவதில் ஈடுபட்டுள்ள குழுக்களின் கொடுங்கோன்மையை எதிர்த்து நிற்க முடிந்து இருக்கிறது என்ற ஒரு பெருமித உணர்வை அனைத்து மத சமூகங்களிலும் உள்ள பெரும் பாலானோர்களும் உணர்ந்தனர் என்றே கூறலாம்.

பொருத்தமான கேள்விகள்

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களிடம் உண் மையைப் பேச இயன்ற முதுகெலும்பு கொண்ட நீதிபதிகள் உள்ளனர் என்பதை - முதன் முதலில் தெரிவிக்கும் கண்டனத்தை உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக நீதித்துறையில் அரசின் குறுக்கீடு உச்சத்தில் இருக்கும் போது இது நடந்து உள்ளது. சுதந்திரமான மனம் கொண்ட நீதிபதிகளின் மாற்றங்கள் மற்றும் பணி மூப்பைப் பின் பற்றாமை என்னும் வடிவங்களில் இருப்ப தாகும். இந்த குறுக்கீடு பேரறிவு கொண்ட முற்றிலும் நியாயப்படுத்தப்பட்ட நீதிபதியின் இந்த கருத்து நாட்டிலும் நீதித்துறையிலும் வீசும் ஒரு புதிய வசந்தக் காற்று போல இருப்பதுடன், நிர்வாகத்தின் அத்துமீறல்களை எதிர்ப்பதற்கு நீதிபதிகளின் நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. கடந்த சில நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகள் நீதிபதியின் அச்சமற்ற செய்திகளும், நீதித்துறையினை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும், நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டும் இருக்கும் அரசின் போக்கைப் பற்றி மிக மிக முக்கியமான கேள்விகளை எழுப்பி உள்ளது. அக்கேள்விகள்: (1) அநீதிக்கு எதிராகப் பேசும் ஜன நாயக மனம் கொண்ட தனிப் பட்ட மக்களைத் தாக்கும் இந்தக் குழுக்கள் எவை? (2) அரசின் ஒரு கரம் போல செயல்படும் தலைமறைவாக இருக்கும் வலைப் பின்னல் அமைப்பு ஒன்று அரசிடம் உள்ளதா? (3) வெறுப்புப் பேச்சு பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு பொருளாதார உதவி அளிக் கப்பட்டு கோட்பாட்டு ரீதியில் ஊக்கம் அளிக்கப்படுகிறதா? (4) இறுதியாக இத்தகைய (பத்திரி கையாளர்கள், அரசுக்கு எதிராக இருக்கும் அரசியல் எதிரிகள் அல்லது நீதித்துறையில் உள்ளவர்கள் பற்றிய) வெறுப்பு பேச்சுக்களை உருவாக்கி அமைப்பு ரீதியாகப் பரப்புவதைத் தடுத்து அழிப்பதற்கு நீதித்துறை என்ன செய்ய வேண்டும்?

வளர்ச்சியும் அரசியல் ஆதரவும்

இணைய தளத்தில் வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விதைப்பவர்களின் டிரோல் செய்திகள் எவ்வாறு இருக்கும் என்பதை  'I am a Troll'  என்ற தனது நூலில் ஸ்வாதி சதுர்வேதி விவரித்துள்ளார். 2000ஆம் ஆண்டு முதல் இந்த வலைப் பின்னல் அமைப்பு வளர்ந்து வந்துள்ளதன் அடையாளங்களைத் தேடிக் கண்டுபிடித்த அவர் அரசில் உள்ள ஒரு மூத்த அரசியல்வாதியின் ஆதரவால் அதன் வளர்ச்சி மிக மிக அதிகமாக இருந்ததற்கான காரணங்களையும் அவர் விவரித் துள்ளார். வலதுசாரி பிரச்சார இணையதளங்கள் வெறுப்புப் பேச்சை தொடர்ந்து தங்களது டிரோல் செய்தி ஒலிபரப்புகளில் தெரிவித்துக் கொண்டும் பத்திரிகையாளர்களை குறைகூறி - குற்றம் சாட்டிக் கொண்டும் இருக்கின்றன.

அதே செய்திகளை டிரண்டிங் தொடரும் வரை அநாம தேய டிவிட்டர் ஸ்கைகள் தொடர்ந்து மறு ஒலி ஒளிபரப்பு செய்து பக்கபலமாக ஒத்துழைத்து ஹேஷ்டேக் பிரச்சாரங்கள் செயல்படுகின்றன. 'கொடூரமான பசுக்கொலை' மற்றும் கற்பனையிலான 'Love Jihad'  ஆகிய சில டிவிட் செய்திகளை அவர் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். அவற்றில் சில பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைப் பற்றி கூறி பெண்களை கேலி செய்வது போலவே உள்ளவை ஆகும். 'I am trolled help' என்ற ஓர் உதவி செய்யும் டிரோலை உரு வாக்கிய பா.ஜ.க.வின் மேனகா காந்தி போன்ற தங்கள் கட்சிக்காரர்களையும் அவர்கள் விட்டு விடுவதில்லை. இந்த குழுவைச் சேர்ந்த டிவிட்டர் ஸ்கை ஒன்று, புகழ் பெற்ற பெண் ஒளிபரப்பு பத்திரிகையாளரைத் தொடர்ந்து இழிவுபடுத்திக் கொண்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சியில் ஒரு நடிகை சேர்ந்தபோது அவரது ஒளிப்பட ஆல் பத்தை மற்றொரு டிவிட்டர் ஸ்கை ஒளிபரப்பியது. எவரையும் கைது செய்து முறைப்படி வழக்குப் பதிவு செய்யும் நடைமுறையைப் பின்பற்றாமல், விசாரணைக் கைதிகளை கொன்றுவிடவேண்டும் என்று இந்த டிவிட்டர்களில் ஒன்று அரசைக் கேட்டுள்ளது. இதில் ஒரு மிக மிக மோசமான கதை என்னவென்றால்,  பெண் காங்கிரசு பத்திரிகை யாளருக்கு விடுக்கப்பட்ட ஒரு டிவிட்டில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் - நிர்பயா மாதிரியே அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் படுவார் என்று கூறப்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டுகளால் மக்களின் கண் பார்வை பறிக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் அனை வரையும் கொல்ல வேண்டும் என்றும், அவர்களது இறுதி ஊர்வலத்தின்மீது குண்டு போட்டு அவர் களைக் கொல்ல வேண்டும் என்றும் - கேட்டுக் கொள்ளும் டிரோல் செய்திகள் பலவும் உள்ளன.

2017ஆம் ஆண்டில் கருநாடக மாநிலத்தில் பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட போது, ஒரு டிவிட்டர் ஸ்கையினாலும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க. தலைவர்களாலும் மிக மிகக் கேவலமான ஒரு செய்தி  பரப்பப்பட்டது. கவுரி லங்கேஷ் போல நீங்களும் கொல்லப்படுவீர்கள் என்று மற்ற பத்திரிகையாளர்களும் அச்சுறுத்தப்பட்டனர்.  ANT செய்தி இணைய தளத்தின்  இணை தோற்றுநர் முகமது ஜீபேருக்கு எதிராக தாக்குதல் மேற்கொள் வதற்கு 757 டிவிட்டர் கணக்குகள் பயன்படுத்தப் பட்டுள்ளன என்றும், அநாம தேயமாக இருந்த அந்த இணைய தளம் மற்றும் ஈ.மெயில் அடை யாளப் பெயரும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க.வின் இளைஞர் அமைப்பின் தலைவர் ஒருவருடையது என்றும் தெரிய வந்துள்ளது. தினமும் 24 மணி நேரமும் இடைவிடாமல் நாளொன்றுக்கு 500 முறைக்கும் மேலாக செய்தியை டிவிட் செய்யும் பண்புகள் கொண்ட இத்தகைய கணக்குகளுக்கு பல துணை கணக்குகள் இருக்கும் செய்தியும் வெளிப்பட்டுள்ளது. இதன் நோக்கமே ஜுபேரின் கைது பற்றிய பொது மக்கள் கொண்டி ருக்கும் கருத்தை மாற்றிக் கொள்ளச் செய்வதுதான். இலக்குக்கு எதிரான தாக்குதல்களை உருவாக்கும் இத்தகைய நடைமுறைகள் அனைத்தையும் Tek Fog  என்ற அமைப்பே கையாண்டு வருகிறது. நவீன காரணிகளைப் பயன்படுத்தி மிகப் பெரிய சமூக ஊடகங்களையும் செய்தி தயாரிக்கும் மேடை களையும் நடத்திச் செல்வது இந்த அமைப்புதான். பெண் பத்திரிகையாளர்களின் டிவிட் செய்தி களுக்கு எதிராக அனுப்பப்பட்ட 8 லட்சம் பதில் களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவை அவர்கள்மீது தாக்குதல் மேற்கொள்பவையாகவே இருந்துள்ளன. இந்த 'டேக்பாக்' அமைப்புக்கு முக்கியமான அரசியல் தலைவர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் இருப்பதால்தான் இந்தியாவின் மேல் தட்டு அரசியல்வாதிகள் இதுபற்றி வாயையே திறக்காமல் மவுனமாகவே இருந்து வருகின்றனர். இத்தகைய செய்திகளை உருப்பெருக்கி, ஒலிப் பெருக்கி பரப்பும் ஹேஷ்டேக் ஒன்று எட்டுக் கோடி பயன்பாட்டாளர்களை சென்று அடைகிறது என்று கூறப்படுகிறது.

நன்கு எண்ணெய் இடப்பட்ட இந்த பிரச்சார இயந்திரம் டிவிட்டர் புயல்களை உருவாக்குவ தற்காக போலி காணொலி (வீடியோ) காட்சிகளையும் மிகப் பெரிய அளவில் டிவிட் இணைப்புகளை விரைவுபடுத்தும் பணிகளையும் செய்கிறது என்று செய்தி தலைமையகம் தெரிவித்திருக்கிறது.

 ஒரு தாக்குதல் தொழிற்சாலை

கணினி வழி தாக்குதல் மட்டுமின்றி, வன்முறை தாக்குதல்களுக்கும் அடிக்கடி இவை வழிவகுக்கும் என்பதற்கு ஒரு முன்னணி வழக்குரைஞரின் அலுவலகத்துக்குள் நுழைந்து அவரைத் தாக்கிய வழக்கை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க.வின் பொறுப் பாளர்கள் இத்தகைய டிரோல் செய்திகளை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர் என்று திருமதி சுவாதி கூறுவதைத் தெரிவித்து இருப்பதைக் காணும்போது, இது ஒன்றும் வியப்பு அளிப்பதாக இல்லை.

பல தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஊதியம் பெறும் பணியாளர்களை நியமித்து அரசின் தகவல் தொழில் நுட்பச் 'செல்'லின் செயல்பாடுகளை அரசு விரிவுபடுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான டிவிட்டர் கணக்குகளைக் கொண்ட வங்கி உருவாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட டிவிட் செய்திகளை அனுப் புவது மற்றும் புயல்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறுகிறார். மத்திய தொழில் நுட்ப 'செல்'லினால் ஒரே நேரத்தில் அதனைப் போன்ற செய்தியை அனுப்ப இயன்ற  (போல் உருவாக்கப்பட்ட) போத்துகளையும் (bots), பா.ஜ.க. கொண்டுள்ளது. அவர்கள் உண்மையான பயன்பாட்டாளர் போலவே காணப்படுவார்கள் என்பதே அதன் காரணம். தொடர்ந்து தாக்கப்பட வேண்டிய தேசிய அளவிலான பத்திரிகை யாளர்களின் பட்டியல் ஒன்று இந்த தன்னார்வத் தொண்டர்களுக்கும் ஊதியம் பெறும் பணியாளர் களுக்கும் அளிக்கப்படுகின்றன. 

இந்தியாவில் மிகவும் பிரபலமான, மிகுந்த மரியாதை அளிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர்களில் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் அளிக்கப்பட்டதுடன் மிக மிக இழிவான செய்திகளால் தாக்கப்பட்டும் உள்ளார். பயன்பாட்டாளரின் உண் மையான விலாசத்தை மறைக்கும் (VPNs)  தனியார் மயப்படுத்தப்பட்ட டிவிட் தளங்களை இந்த தன்னார்வத் தொண்டர்களும், ஊதியம் பெறும் பணியாளர்களும் பயன்படுத்து கின்றனர்.  

நுபுர் சர்மாவின் நிகழ்ச்சி தொடர் பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கு திரும்பிச் சென்றால், நாடு நீதித்துறையுடன்தான் நிற்கிறது என்பதை நீதிமன்றம் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. இந்த வெறுப்புப் பேச்சு டிவிட் செய்திகள் அனைத்தும் ஓர் அரசியல் கட்சியின் தொழிற் சாலையில் இருந்துதான் உருவாக்கப்படுகின்றன. இதைப்போல கோடிக்கணக்கான செய்திகள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. இதுபற்றி சுதந்திரமான காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றினால் குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப்படுவது மிக மிக இன்றியமையாதது ஆகும். அது மட்டு மல்லாமல், அவர்கள்மீது குற்றச்சாட்டுகள் பிறப் பித்து வழக்குகள் தொடரப்பட வேண்டும். இந்த வெறுப்புப் பேச்சுக்களை தயாரிக்கும் டிவிட் இணையதள அமைப்புகள் நசுக்கப்பட வேண்டும்.

ஜனநாயகம் அழியாமல் உயிர்ப்புடன் இருப்ப தற்கும் நீதித் துறை அச்சுறுத்தப்படாமல் இருப்ப தற்கும் இது மிக மிக முக்கியமானது ஆகும்.

நன்றி; 'தி இந்து' 19.7.2022

தமிழில்: த.க. பாலகிருட்டிணன் 

No comments:

Post a Comment