அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி வகுப்புகள் தொடக்கம் : முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி வகுப்புகள் தொடக்கம் : முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை

சென்னை, ஆக. 23 இந்து சமய அறநி லையத் துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உள்பட 9 பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப் புகளை காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (22.8.2022) தலைமைச் செயலகத் தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச் செந்தூர், பழநி மற்றும் சிறீரங்கம் ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் 151 மாணவர்களுடனும், சமயபுரம்   மாரி யம்மன் திருக்கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி, கும்பகோணம்  நாகநாதசுவாமி திருக்கோயில் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி, திருவில்லிப்புத்தூர்  நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் திவ்ய பிரபந்தப் பாடசாலை ஆகிய 3 பயிற்சிப் பள்ளிகளில் 46 மாணவர் களுடனும், பயிற்சி வகுப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாண வர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணை களை வழங்கிடும் அடையாளமாக 18 மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.

2021_2022 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக் கையில், "ஜாதி வேறுபாடின்றி அர்ச்சகர் களை உருவாக்கும் இந்து சமய அறநிலை யத்துறையின் 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்" எனவும், "சமயபுரம்   மாரியம்மன் திருக் கோயிலில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய ஓதுவார் பயிற்சி பள்ளி ஏற்படுத் தப்படும்" எனவும், "திருநாகேஸ்வரம்  நாகநாத சாமி திருக்கோயிலில் உள்ள தவில் நாதஸ்வர இசைப் பள்ளி மேம்படுத்தப்படும்" எனவும், "சிறீவில்லிபுத்தூர்  ஆண்டாள் திருக்கோயில் சார்பாக திவ்ய பிரபந்த பாடசாலை மீண்டும் தொடங்கப்படும்" எனவும் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, சென்னை (வைணவம்), திருவண்ணாமலை (சைவம்), மதுரை (சைவம்), திருச்செந்தூர் (சைவம்), பழநி (சைவம்) மற்றும் சிறீரங்கம் (வைணவம்) ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட 

6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் 

151 மாணவர்களுடனும், சமயபுரம்  மாரியம்மன் திருக்கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி, கும்பகோணம்  நாகநாதசுவாமி திருக்கோயில் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி, திருவில்லிப்புத்தூர்,  நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் திவ்ய பிரபந்தப் பாடசாலை ஆகிய 3 பயிற்சிப் பள்ளிகளில் 46 மாணவர்களுடனும், பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, அப் பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 18 மாணவர் களுக்கு சேர்க்கை அனுமதி ஆணை களையும் வழங்கினார்.

மேற்கண்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உள்பட 9 பயிற்சிப் பள்ளிகளும் உண்டு உறைவிட பள்ளி யாக செயல்படுவதோடு, பயிற்சி பெறும் ஒவ் வொரு மாணவருக்கும் மாதம் ரூ.3000 வீதம் ஆண்டு ஒன்றிற்கு மொத்தம் 70.92 லட்சம் ரூபாய் உதவித் தொகை திருக்கோயில்கள் சார் பாக வழங் கப்படுகிறது இந் நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு , சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணை யர் ஜெ.குமரகுருபரன், காணொலிக் காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்


No comments:

Post a Comment