60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க "‘விடுதலை' சந்தா தாரீர்!" எனப் பதாகை பிடித்து பெரம்பூர் சார்ந்த மாதவரம் நெடுஞ்சாலையில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி தலைமையில்  ‘விடுதலை' சந்தா சேர்ப்பு பிரச்சாரப் பணி நடைபெற்றது. சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலை வகித்தனர். வடசென்னை மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், கண்ணதாசன் நகர் தலைவர் கு.ஜீவா, செயலாளர் கண்மணி துரை, அமைப்பாளர் வி.இரவிக்குமார், த.மரகதமணி, மாணவர் கழகம் ந.பார்த்திபன், வில்லிவாக்கம் சி.அன்புச்செல்வன் மற்றும் தோழர்கள் இதில் கலந்து கொண்டனர். ‘விடுதலை' ஏடு குறித்து விளக்கத் துண்டறிக்கை பொதுமக்கள், வியாபாரிகளிடம் தரப்பட்டது. சந்தாவுக்கு நன்கொடையும் பெறப்பட்டது.

தா.பழூர் ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ் சேகரன் விடுதலை ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூ.2000த்தை அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் அளித்தார் (20.8.2022) செயங்கொண்டம் நகரத் தலைவர் வை.செல்வராஜ் விடுதலை நாளேட்டிற்கு ஆறு மாத சந்தாவிற்கான தொகை ரூ.1000த்தை அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் அளித்தார் (20.8. 2022). திருவள்ளூர் மாவட்டம், கீழ்நல்லாத்தூர்  கிராமத்தைச் சார்ந்த பல்லவன், திருநகர் நலச்சங்க செயலாளர்  த.வேலாயுதம்  ஓராண்டு விடுதலை சந்தாவினை  திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர் இரா.ஸ்டாலினிடம் வழங்கினர். திமுக வழக்குரைஞர் மு.சுந்தரவதனம் சோழிங்கநல்லூர் மாவட்ட இணைச்செயலாளர் வேலூர் பாண்டுவிடம் விடுதலை ஓராண்டு சந்தா ரூ.2000அய் வழங்கினார்.

குடந்தைகழகமாவட்டம்,தேபெருமாநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.கே.குமரவேல் 10 விடுதலை சந்தா, குடந்தை கழக மாவட்டம், அன்பு மருத்துவமனை மேலாளர் உ.கரிகாலன் விடுதலை ஆண்டு சந்தா, கும்பகோணம் அரு. ரெங்கநாதன் மகன் ரெ.வைரமுடி விடுதலை ஆண்டு சந்தாக்களை கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி,  மண்டல செயலாளர் க.குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் வி.ழி.கணேசன், ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோரிடம் வழங்கினர் (25-08-2022).

குடந்தை வய்.மு.கும்பலிங்கம் விடுதலை ஆண்டு சந்தா, கும்பகோணம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் சோழபுரம் அறிவழகன் விடுதலை சந்தா, கும்பகோணம் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர் எஸ். பிரதாபன் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மண்டல செயலாளர் க.குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன், ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார், வைரமுடி ஆகியோரிடம் வழங்கினர் (25-08-2022)

கும்பகோணம் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் ம.க.ஸ்டாலின் (பா.ம.க) விடுதலை 50 ஆண்டு சந்தாக்களை கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் கு. நிம்மதி,மண்டல செயலாளர் க.குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார் திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன், ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார், ஆகியோரிடம் வழங்குவதாக உறுதியளிததார். (25-08-2022). ஈரோடு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ் விடுதலை ஆயுள் சந்தாவை அமைப்புச்செயலாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார். வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், மண்டல தலைவர் இரா.நற்குணன் ஆகியோர் உடனிருந்தனர். கும்பகோணம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் விடுதலை 10 ஆண்டு சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் கு. நிம்மதி, மண்டல செயலாளர் க.குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார் திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன், ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார், ஆகியோரிடம் வழங்கினார் (25-08-2022)

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் தலைமைக் காசாளராக பணி நிறைவு பெற்ற தோழர் ஜி.குமார் சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத்தின் இணைச்செயலாளர் வேலூர் பாண்டுவிடம் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000அய் வழங்கினார். சென்னை 188ஆவது வட்ட திமுக செயலாளர் மு.ரா. செந்தில் சோழிங்கநல்லூர் மாவட்ட இணைச்செயலாளர் வேலூர் பாண்டுவிடம் விடுதலை ஓராண்டு சந்தா ரூ.2000அய் வழங்கினார். மதுரை பழச்சந்தையில் மாவட்ட தலைவர் அ.முருகானந்தமும். கழக அமைப்பு செயலாளர் மதுரை வே.செல்வமும் விடுதலை சந்தா சேர்ப்பதில் ஈடுபட்ட பொழுது நண்பர்கள். வியாபாரிகள் மிகவும் ஆர்வமாக சந்தா வழங்கி ரசீது பெற்றுக் கொண்டார்கள்.


No comments:

Post a Comment