அய்.டி.பி.அய். வங்கியின் 51 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

அய்.டி.பி.அய். வங்கியின் 51 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு

புதுதில்லி, ஆக.29- அய்டிபிஅய் வங்கியின் 

51 சதவிகிதப் பங்குகளை தனியா ருக்கு விற்க, ஒன்றிய பாஜக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இப்போது அய்டிபிஅய் வங்கியின் 94 சதவிகிதப் பங்குகளை ஒன்றிய அரசும், பொதுத் துறை நிறுவன மான எல்அய்சி-யும் வைத்துள்ளன. அதாவது, அய்டிபிஅய் வங்கி யின் பங்குகளில் 45.48 சதவிகிதம் ஒன்றிய அரசு வசமும்,  49.24 சதவிகிதம் எல்அய்சி நிறுவனத்தின் வசமும் உள்ளன. இந்நிலையில், இந்த வங்கியை முழுமையாகத் தனி யார்மயமாக்க ஏற்கெனவே செய்த முடிவை மீண்டும் ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது. அய்டிபிஅய் வங்கியின்  51 சதவிகிதப் பங்குகளை விற்பது தொடர்பான முறைப்படியான நட வடிக்கைகளை ஒன்றிய அரசு அடுத்த மாதம் தொடங்கும் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக பங்கு விற்பனை முறை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

அய்டிபிஅய் வங்கியில் அரசு மற்றும் எல்அய்சியின் பங்குகளில் சிலவற்றையாவது விற்று நிர்வாகத்தை எப்படி யாவது, தனியாரிடம் கொடுத்து விட வேண்டும் என்று அதிகாரிகள் பணிக்கப் பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், இந்திய ரிசர்வ் வங்கியானது,  முதலீட்டாளர்கள் 40 சதவிகி தத்திற்கும் அதிகமான பங்குகளை வாங்க அனும திக்கும் என்று ‘புளூம்பெர்க்’ செய்தி  நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவின் நிதி அமைச்சகம் மற்றும் அய்டிபிஅய் வங்கியின் பிரதிநிதிகள் இதுதொடர்பாக கருத்து  தெரிவிக்க மறுத் துள்ளனர். எல்அய்சி-யின் பிரதிநிதிகளும் உடனடி யாக பதில் எதையும் அளிக்கவில்லை. அய்டிபிஅய் வங்கியின் சொத்து மதிப்பு சுமார் 5 பில்லியன் டாலர் அல்லது 4 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

அதிர்ச்சித் தகவல்

இணைய செயலிகள் மூலம் வாங்கும் பொருட்களில் போலிகள் தான் அதிகம் 

மும்பை, ஆக.29 அங்கீகரிக்கப்படாத செய லிகள் மூலம் மும்பை வாழ் மக்கள் வாங்கும் பொருட்களில் போலிகள் அதிகம் இருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

பெரும்பாலான மும்பை வாழ் மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கான பொருள்களை இணைய செயலிகள் மூலம் வாங்குகின்றனர். இவற்றில் நுகர்வோர் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டுச் சாதனங்கள், அழகு சாதன பொருள்கள் போலி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 8 மாதங்களில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போலி பொருள்களை பறிமுதல் செய்ததோடு 61 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு அதி காரிகள் தெரிவிக்கின்றனர். எனவே அன்றாட தேவைக்கான பொருள்களை அங்கீகரிக்கப்படாத இணைய செயலிகள் மூலம் வாங்கும் நிலையில், அவை தரமானவைதானா என உறுதி செய்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத் துகின்றனர்.

No comments:

Post a Comment