ரூ5ஆயிரம் கோடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 2, 2022

ரூ5ஆயிரம் கோடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

சென்னை, ஆக. 2- முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளபடி ரூ.5000 கோடி மதிப்பீட் டில் 400 எம். எல்.டி திறன் கொண்ட கடல்நீரை குடி நீராக்கும் புதிய திட்டத் திற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன என நக ராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை மடிப்பாக் கத்தில் ரூ.249.47 கோடி மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட் டத்தினை நகராட்சி நிரு வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (1.8.2022) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் மா.சுப்பிர மணியன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்ததாவது:

பாதாள சாக்கடைத் திட்டம் என்பது சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் 184 கோடி ரூபாய் மதிப் பீட்டில் முதற்கட்டமாக 40.730 கிலோமீட்டரும், ரூ.65 கோடி செலவிலே இரண்டாம் கட்டமாக 20 கிலோ மீட்டரும் பணியை இந்த ஆண்டு எடுத்திருக்கிறோம். ரூ.150 கோடி செலவிலே 3 திட் டங்கள் ராம்நகர், சீனி வாசாநகர், ராமலிங்கம் நகர், ஷீலாநகர், அதே போல் முதல்கட்டமாக ரூ.29.33 கோடி மதிப்பிட் டிலும் வடக்கு ராமலிங் கம் நகர் ரூ39.33 கோடி பாதாள சாக்கடை திட் டங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. மடிப்பாக்கம், கிருபாநகர், பாலாஜி நகர், ரூ.66கோடி செல விலே நடைபெற்று இருக் கிறது. 

சிங்காரத் திட்டத்தின் கீழ் சென்னை மாநக ராட்சியில் மொத்தம் 900 க்கும் மேற்பட்ட கழி வறைகள் இருக்கிறது. கழிப்பறைகள் முழுமை யாக தூய்மைப்படுத்தப்ப டும் திட்டத்தின் 'கீழ் முதற்கட்டமாக 32 கோடி  ருபாய் செலவிலே 366 இடங்களிலே கழிப் பறைகள் புதிதாக கட் டப்பட்டு பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் பாதாள சாக்கடைத் திட்டம், ஒரு பக்கம் கழிப்பறைகள் திட் டம் தொடர்ந்து மாநக ராட்சி சார்பாக இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பாதாள சாக்கடை திட்டங்கள் மொத்தம் 42 இடங்களில் எடுத்து இருக்கிறார்கள். அதில் 17 பணிகள் முடிவுற்று இருக் கிறது. பணிகள் நடை பெற்று வருவது 8 இடங் களில். மீதம் நடைபெற வேண்டிய இடங்கள் 17. அனைத்து பணிகளையும் உரிய காலத்திற்குள் முடித்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

சென்னை மாநகராட் சிப் பகுதிகளில் தற்போது 1128 கி.மீ நீளத்திற்கு பாதாள சாக்கடைத் திட் டப்பணிகள் நடைபெற்று வருகிறது. கத்திவாக்கம், மணலி, மாதவரம், அம் பத்தூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கொட் டிவாக்கம், பாலவாக்கம் ஆகிய இடங்களில் 4978 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று இருக்கிறது. நம்முடைய முதலமைச்சர் வருடத்திற்கு 500 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக இதற்கு வழங்கி வருகிறார்.

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்து இடங் களிலும் முழுமையாக நடைபெற்று வருகிறது. கிழக்கு கடற்கரை சாலைப் பகுதி மிகப்பெரிய அளவிலே விரிவடைந்து வருகிறது. அப்ப குதிவாழ் மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு தமிழ்நாடு முத லமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். 

மடிப்பாக்க பாதாள சாக்கடைப்பணிகள் மேலும், நெம்மேலியில் ரூ.100 கோடி மதிப்பீட் டில் அமைக்கப்பட்டு செயல்பட்டுவரும் கடல் நீரைகுடி நீராக்கும் திட் டத்தின்மூலம் பல்வேறு பகுதிகளுக்கு தற்போது 100 எம்.எல்.டி பாதுகாக் கப்பட்ட குடிநீர் வழங் கப்பட்டு வருகிறது. மேலும், 3மாதத்திற்குள் 150எம்.எல். டி தண்ணீர் கொண்டு வரப்படவுள் ளது. 

மேலும், முதலமைச் சரின் அறிவுறுத்தலின்படி ரூ.5000 கோடி மதிப்பீட் டில் 400 எம்.எல்.டி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட் டத்திற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இருக்கின்ற பெரிய ஏரி களில் மழைநீரை சேமித்து, என்றைக்கும் குடி நீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் தர வேண்டும் என்று தமிழ்நாடு முதல மைச்சர் உத்தரவிட்டிருக் கிறார்.

நகர்ப் புறங்களில் ஏற்கெனவே உள்ள பாசனப் பகுதிகள் அனைத் தும் நகரமாக மாறி விட்ட காரணத்தால், 1000 500ஏக்கரில் உள்ள ஏரிகளை முழுமையாக தூர்வாரி தண்ணீரைத் தேக்கி குடிநீர் பற்றாக் குறை ஏற்படாத வண் ணம் தர வேண்டுமென்று முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். மடிப்பாக் கம் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை 30 மாத கால அளவிற்குள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு தெரிவித் தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர். பிரியாராஜன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், ஆணை யர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர குடி நீர் வாரிய மேலாண்மை இயக் குநர்இரா.கிர் லோஷ்குமார், செயல் இயக்குநர் ராஜகோ பால் சுன்கரா மற்றும் உள் ளாட்சி அமைப்புகளின் பிர திநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

No comments:

Post a Comment