தேசபக்தர்கள் என வேடம் போடும் பி.ஜே.பி.யினர் பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்து அராஜகம்! - 4 பேர் கைது!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

தேசபக்தர்கள் என வேடம் போடும் பி.ஜே.பி.யினர் பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்து அராஜகம்! - 4 பேர் கைது!!

தருமபுரி,ஆக.16- தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் மணி மண்டபம் உள்ளது. அதில் ஒரு பகுதியாக தேச பக்தர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் பாரதமாதாவுக்கு சிலை அமைத்து  நினைவாலயம் கட்டியுள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி பா.ஜ.க. சார்பில் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊர்வலம் நடத்தினர். அப்போது சுப்பிரமணிய சிவா மணி மண்டபத்தில் உள்ள பாரதமாதாவுக்கு  மாலை அணிவித்து வழிபாடு நடத்தச் சென்றனர். சுப்பிரமணிய சிவாவின் மணி மண்டபம் பூட்டப்பட்டருந்தது.மணி மண்டபம் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால்  மண்டப காப்பாளர் இடம் சாவி கேட்டனர். 

அதற்கு காப்பாளர் முக்கிய நாட்களில் தான் மணிமண்டபம் திறக்கப்படும், அதற்கு முன்பாக அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்று கூறினார். 

அவரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடு பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் தலைமையிலான பாஜகவினர் கேட்டின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே சென்று பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து 'பாரத் மாதா கி ஜே' என்று முழக்கமிட்டு வழிபட்டனர்.

மணி மண்டபத்தின் பூட்டை உடைத் ததை கண்ட பொதுமக்கள் மற்றும் காப் பாளர் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்  தொடர்பாக 50 பேர் மீது வழக்கு தொடர்ந்ததுடன் பிஜேபி நிர்வாகிகளான சிவலிங்கம், ஆறுமுகம், மணி, திருமல்வாடி மௌனகுரு ஆகியோர் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்  ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டியில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர் புடைய  தருமபுரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பாஸ்கர் மற்றும் பாஜக நிர்வாகிகள் தலைமறைவாகி உள்ளனர் அவர்களை காவல்துறையினர்   தேடி வருகின்றனர்.


No comments:

Post a Comment