40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

கழகப்பொதுச்செயலாளரிடம் விடுதலை சந்தா

திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பி.மலர்மன்னனின் மகன் ம.அறிவுச்செல்வன் வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் டியுட்டர் (Tutor) பணியில் சேர்வதன் மகிழ்வாக மூன்று ஆண்டு விடுதலை சந்தாவுக்கான ரூ.6000 காசோலையை   பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கினார் (19.08.2022).

ஜலகண்டாபுரம் பேரூராட்சி மன்றத்தின் தலைவர் காசி ஒரு ஆண்டு சந்தா, ஆசிரியர் செலவடை பெ.சண்முகசுந்தரம் ஒரு ஆண்டு சந்தா வழங்கினர். சிறந்த பேச்சாளர் பெரியார் பிஞ்சு சித்தார்த் பெற்றோர் க.அமிர்த கணேசு-நாத்திகா இணையர் விடுதலை வாழ்நாள் சந்தாவை கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம்  வழங்கினர். உடன் தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம். பவுண்டரிகபுரம் முருகேசன் - அறிவுமணி ஆகியோர்10 விடுதலை ஆண்டு சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மண்டல செயலாளர் கு.குருசாமி, திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் வி.ழி.கணேசன், ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோரிடம் வழங்கினர் (19-08-2022).

19.08.2022 அன்று கேரள மாநிலம் வைக்கத்தில் தேனி மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் ஆ. ஆசிர்வாதமிடம்  கம்யூனிஸ்ட் அலுவலகப் பொறுப்பாளர் பாபுராஜ் விடுதலை சந்தா அரையாண்டு (1000 ரூபாய்) வழங்கினார். உரத்தநாடு நகர திராவிடர் கழகத் தலைவர் பேபி இரவிச்சந்திரன் தலைமையில் தஞ்சை மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை இராமசாமி, தஞ்சை மாவட்டத் திராவிடர் கழகக் துணைச்செயலாளர் அஉத்திராபதி, ஆகியோர் முன்னிலையில் உரத்தநாடு சுபம் மெடிகல்,ஆப்டிகல்ஸ் உரிமையாளர் அரையாண்டு விடுதலை சந்தா, நாட்டாமை உணவக உரிமையாளர் ரமேஷ் அரையாண்டு விடுதலை சந்தா, சுபம் பர்னிச்சர் ஏஜென்சிஸ், உரிமையாளர், பாக்யராஜ் அரையாண்டு விடுதலை சந்தா வழங்கினர்.

உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் மழவராயர் தெரு, யாதவர் தெருவில் விடுதலை சந்தா சேர்ப்பு,
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் 60 ஆண்டுகால விடுதலை ஆசிரியர் பணிக்கு நன்றி பாராட்டி 60 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் சேர்ப்பு திட்டத்திற்கு ஒக்கநாடு மேலையூர் மேனாள் இந்நாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுநல ஆர்வலர்கள், அனைத்துக் கட்சி சான்றோர் பெருமக்கள், ஊர் பெரியோர்கள் விடுதலை சந்தாக்களை  வழங்கினார்கள்: ஒக்கநாடு மேலையூர் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் கனகவல்லி திருப்பதி, ஒக்கநாடு மேலையூர் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோ  மகாலிங்கம், ஒக்கநாடு மேலையூர் ஊராட்சி மன்றத்தலைவர் சித்ரா ரவிச்சந்திரன், ஒக்கநாடு மேலையூர் கிராம பஞ்சாயத்தார் கு.ரெங்கசாமி, ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ம. ராஜரத்தினம், ஒக்கநாடு மேலையூர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ம.ராஜகோபால், ஒக்கநாடு மேலையூர் எல்.வி.எஸ். வாடகை பத்திரம் உரிமையாளர் வேலாயுதம். ஒக்கநாடு மேலையூர் கோவி. அன்பழகன், ஒக்கநாடு மேலையூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜி.பாக்யராஜ். மழவராயர் தெரு ஊராட்சி மன்ற உறுப்பினர் வ. அன்பழகன், யாதவர் தெரு ஊராட்சி மன்ற உறுப்பினர் வெ ஜெகதீசன். மழவராயர் தெரு சுகன்யா  மெடிக்கல் சென்டர் உரிமையாளர் பொதுநல ஆர்வலர் சவு.பிரபு, மழவராயர் தெரு மேனாள் அதிமுக கிளைச் செயலாளர் செல்வம், யாதவர் தெரு இந்திய காங்கிரஸ் கிளைக் கழக  தலைவர் ஜெ.காசிநாதன்,  ஒக்கநாடு  மேலையூர் வி.கே.முத்துராமன்  அதிமுக ஒரத்தநாடு.மலர்கொடி ஏஜென்சிஸ் இந்தியன் ஆயில் பைபாஸ் ரோடு, பொன்னாப்பூர் மேற்கு, ஊராட்சி மன்ற தலைவர் க.சுவாமிநாதன் பொன்னாப்பூர் கிழக்கு, ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சம்பத், கண்ணை கிழக்கு எஸ்.மாணிக்கம் ஆகியோர்கள் ‘விடுதலை' சந்தாவை தஞ்சை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் அ. உத்திராபதியிடம் வழங்கினர்.



No comments:

Post a Comment