40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!


பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 5 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.10,000 வழங்கினார். உடன்: பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன். (9.8.2022, பெரியார் திடல்)]

முனைவர் உ.பிரபாகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 1 ஆண்டு விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ.2000 வழங்கினார். உடன்: பேராசிரியர் பி.இரத்தினசபாபதி, முனைவர் வாசு அறிவழகன்.  கலைவேந்தன் பிறந்தநாளை முன்னிட்டு, எல்லாபுரம் ஒன்றிய தலைவர் அருணகிரி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 3 ஆண்டு, 2 அரையாண்டு சந்தாக்கள் என மொத்தம் ரூ.8000 வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் (9.8.2022, சென்னை).  அரியலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சு.அறிவன், துணைத் தலைவர் வீரா திராவிட வித்து, மாணவர் கழகத் தோழர் வெற்றி செல்வன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து  அரையாண்டு விடுதலை சந்தா ரூ .1000 வழங்கினர். சீர்காழி தோழர் ராமண்ணா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை சந்தா ரூ.2000 வழங்கினார் (7.8.2022, சென்னை). பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தருமன் வீரமணி,  தமிழர் தலைவரிடம் விடுதலை அரையாண்டு சந்தாவுக்கான தொகை ரூ.1000/- வழங்கினார் (7.8.2022, சென்னை).

சென்னை அடையாறு கோ.ரமேஷ் பாபுவிடமிருந்து ஓர் ஆண்டிற்கான விடுதலை சந்தாவினை பெற்றுக் கொண்டார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ். மேட்டுப்பாளையம் அம்மன்துரை (திமுக), மேட்டுப்பாளையம் பிரபாகரன்.நகர் திருமக்காள், மேட்டுப்பாளையம் 25ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் உமாராணி கணேசன், மேட்டுப்பாளையம் மாவட்ட இளைஞரணி தலைவர் வீரமணி  ஆகியோர் ‘விடுதலை' ஆண்டு சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, நகரச் செயலாளர் சந்திரன் ஆகியோரிடம் வழங்கினர். உடன்: காரமடை ராஜா, செல்வராசு (8.8.2022). ஏ.அய்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் பழ.இராமச்சந்திரன்,  காரைக்குடி தி.மு.க. 12 ஆவது வட்டக் கழக செயலாளர் இரா.இராதாகிருட்டிணன் ஆகியோர் விடுதலை ஓராண்டு சந்தாக்களை பொதுக்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணியிடம் வழங்கினர்.

தி.மு.க. கோபி நகரசெயலாளர், கோபி நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.நாகராஜ் விடுதலை 10ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம் ஆகியோரிடம் வழங்கினார் (05-08-2022). ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் விடுதலை 100ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை (11-08-2022) இன்று ஈரோடு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நேரில்  மகிழ்வுடன் வழங்குவதாக கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம் ஆகியோரிடம் உறுதியளித்தார் (05-08-2022). ம.தி.மு.க ஈரோடு மாவட்ட செயலாளர் ந.கந்தசாமி விடுதலை 5ஆண்டு சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம் ஆகியோரிடம் வழங்கினார்(05-08-2022)

கோவை மண்டல மகளிரணி செயலாளர் ப.கலைச்செல்வி விடுதலை 10 ஆண்டு சந்தா - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கோவை வே.ஈஸ்வரன்  விடுதலை  ஆண்டு சந்தா - கோவை கண்ணப்பன் தி.மு.க விடுதலை  ஆண்டு சந்தா - கோவை 95ஆவது வட்ட தி.மு.க செயலாளர், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.காதர் விடுதலை 10ஆண்டு சந்தா - கோவை தெற்கு மண்டலத் தலைவர் தனலெட்சுமி விடுதலை ஆண்டு சந்தா - கோவை மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரனின் தாயார் விடுதலை  சந்தா - கோவை 99ஆவது வட்ட திமுக செயலாளர் முகமதுஜின்னா விடுதலை  சந்தா - கோவை மாவட்ட ப.க துணைத்தலைவர் அக்கிரி நாகராசன் 10 விடுதலை  சந்தா - கோவை மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணி தலைவர் இ.கண்ணன் 10 விடுதலை  சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், மண்டல செயலாளர் சிற்றரசு, மாநகரத் தலைவர் புலியகுளம் வீரமணி, மண்டல தொழிலாளரணி செயலாளர் வெங்கடாசலம், ஆகியோரிடம் வழங்கினர். உடன்  பொதுக்குழு உறுப்பினர் திலகமணி (7-8-2022).

கிருட்டினகிரி மாவட்ட தலைவர் த.அறிவரசனிடம் பாரூர் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் சாமி கண்ணு ஆறு மாத விடுதலை சந்தா, அரசம்பட்டி இளவரசி ஆறு மாத விடுதலை சந்தா,  கரிமங்கலம் ஒன்றியம் பந்தரஅள்ளி மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் மதன் மூன்றாண்டு விடுதலை சந்தா, தாமோத்திரஅள்ளி மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருட்டிணன் விடுதலை ஓராண்டு சந்தா, அரசம்பட்டி மா சீனிவாசன் ஓராண்டு விடுதலை சந்தா, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வி.சி கோவிந்தசாமி ஓராண்டு விடுதலை சந்தா, அரசம்பட்டி மருத்துவர் த வீரக்குமார் ஓராண்டு விடுதலை சந்தா, அரசம்பட்டி மருந்தாளர் தயாளன் ஆறு மாத விடுதலைச் சந்தா, எம் ஆர் சக்திவேல் ஓராண்டு விடுதலைச் சந்தாக்களை வழங்கினர்.


கிருட்டினகிரி மாவட்ட தலைவர் த.அறிவரசனிடம் அரசம்பட்டி மோகன் ஆறு மாத விடுதலை சந்தா, கன்னிப்பட்டி  ஆசிரியர் கந்தசாமி ஆறு மாத விடுதலை சந்தா, வீரமலை  வி.கோ. அண்ணாதுரை ஆறு மாத விடுதலை சந்தா, போச்சம்பள்ளி  ஒன்றிய திமுக துணைச் செயலாளர் பெ.பெ.திருமால் ஓராண்டு விடுதலைச் சந்தாக்களை வழங்கினர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மேனாள் இணை துணைவேந்தர் முனைவர் மு.தவமணி 10 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ20,000அய் கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரனிடம் வழங்கினார். உடன் தொழிலாளரணி வெங்கடாசலம்.

கிருட்டினகிரி மாவட்ட தலைவர் த.அறிவரசனிடம் அரசம்பட்டி மோகன் ஆறு மாத விடுதலை சந்தா, கன்னிப்பட்டி  ஆசிரியர் கந்தசாமி ஆறு மாத விடுதலை சந்தா, வீரமலை  வி.கோ. அண்ணாதுரை ஆறு மாத விடுதலை சந்தா, போச்சம்பள்ளி  ஒன்றிய திமுக துணைச் செயலாளர் பெ.பெ.திருமால் ஓராண்டு விடுதலைச் சந்தாக்களை வழங்கினர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மேனாள் இணை துணைவேந்தர் முனைவர் மு.தவமணி 10 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ20,000அய் கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரனிடம் வழங்கினார். உடன் தொழிலாளரணி வெங்கடாசலம்.





No comments:

Post a Comment