மருத்துவ ஆராய்ச்சி மாணவிக்கு 34 ஆண்டு சிறை பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

மருத்துவ ஆராய்ச்சி மாணவிக்கு 34 ஆண்டு சிறை பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

ரியாத், ஆக. 21-  சவுதியைச் சேர்ந்தவர் சல்மா அல்-ஷெகாப். பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சிறுபான்மை சியா முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த சல்மா, சவுதியின் சன்னி முஸ்லிம் ராஜ்ஜியத்தில் உள்ள பாகுபாடுகள் பற்றிக் குறை கூறி வந்தார்.

இந்நிலையில் சவுதி அரசுக்கு எதிராக ட்விட்டரில் வதந்திகளை பரப்பியதாக சல்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்தாண்டு ஜனவரி மாதம் விடுமுறையில் சல்மா சவுதி வந்தபோது, கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத் தில் வழக்கு தொடர்வதற்கு முன்பாக 285 நாட்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

அதன் பின் இவர் மீதான வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கில் சல்மாவுக்கு 34 ஆண்டு சிறைத் தண்டனையும், அதன்பின் 34 ஆண்டுகள் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

10 புதிய பொருட்களை 

அறிமுகம் செய்தது ஆவின்

சென்னை, ஆக. 21- ஆவின் மூலம் தயாரிக்கப்பட்ட பலாப்பழ அய்ஸ்கிரீம், கோல்டு காஃபி உள்ளிட்ட 10 புதிய பொருட்களை அறிமுகப்படுத்திய பால் வளத்துறை அமைச்சர் நாசர், இந்தப் புதிய பொருட்கள் மூலம் மாதம் ரூ.2 கோடி வரை லாபம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

ஆவின் சார்பில் 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்த பால்வளத் துறை அமைச்சர் நாசர், சென்னை நந்தனத்தில் 19.8.2022 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களிடமிருந்து மாறுபட்டு, வித்தியாசமான சூழலில், எந்தவிதமான கலப்பும் இல்லாமல் ரசாயனங்களும் சேர்க்காமல், முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கம் இல்லாமல் இந்த 10 புதிய பொருள் களும் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளோம்.

கறந்த பால் கறந்தபடி, தாய்ப்பாலுக்கு நிகராக உருவாக் கப்பட்டு இன்று 10 புதிய பொருட்களை வெளியிட்டிருக் கிறோம். பலாப்பழ அய்ஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், கோல்டு காஃபி, வெண்ணெய் கட்டி, பாசந்தி, ஆவின் கேக் மிக்ஸ், பாலாடைக்கட்டி, அடுமனை யோகார்ட், ஆவின் பால் பிஸ்கெட், ஆவின் வெண்ணெய் முறுக்கு போன்றவை எல்லாம் இன்றைய தினம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

இந்த புதிய பொருட்கள் மூலம் மாதம் ரூ.2 கோடி வரை லாபம் வரும் என எதிர்பார்க்கின்றோம். ஆவின் குடிநீர் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார். தனியார் பால் நிறுவனங்களின் விலை உயர்வு காரணமாக ஆவினில் 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது" என்று அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய பல்கலை.யுடன் இணைந்து வழங்கும் பிஎஸ்சி படிப்பு

சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை, ஆக. 21- ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கும் பிஎஸ்சி படிப்புகளில் சேர ஆகஸ்ட் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி படிப்புகள் ‘பிளண்டடு’ (Blended) எனப்படும் நேரடி மற்றும் இணையவழி கற்பித்தல் முறையில் பயிற்று விக்கப்படுகின்றன. இந்நிலையில் மெல்போர்ன் பல்கலை. யுடன் இணைந்து பிஎஸ்சி பட்டப்படிப்புகளை தொடங்குவ தற்கு சென்னை பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. அதன் படி நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த திட்டத்தில் பிஎஸ்சி வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகள் இடம்பெற உள்ளன. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த படிப்புகளில் சேரலாம். விருப்பமுள்ள மாணவர்கள் unom.ac.in  என்ற இணையவழியில் ஆகஸ்ட் 30-க்குள் விண் ணப்பிக்க வேண்டும்.

பின்னர், பிளஸ் 2 பாடத்திட்டம் அடிப்படையில் நுழை வுத் தேர்வு நடத்தப்படும். அதில் தகுதி பெறுபவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும். இந்த படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.49,000 கல்விக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044-25399779 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் ரீட்டா ஜான் கூறும்போது, ‘‘மொத்தம் 3 ஆண்டுகள் கொண்ட இந்த படிப்பில் முதல் 4 பருவங்களில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடம்இடம்பெறும். இறுதியாண்டில் மாணவர்கள் தங்களுக்கான துறைகளை பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி வேதியியல், பிஎஸ்சி கணிதம் என்று தேர்வு செய்து கொள்ளலாம். இந்தப் பாடப்பிரிவை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் நல்ல வரவேற்பு உள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment