சூரியக் கதிரைக் கவரும் "லென்ஸ்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

சூரியக் கதிரைக் கவரும் "லென்ஸ்"

சூரியக் கதிர்கள் எந்தக் கோணத்திலிருந்து வந்தாலும் அவற்றை, சூரிய ஒளி செல்கள் மீது குவிக்கும் லென்சை, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதனால், சூரியன் உதித்தது முதல் மறையும் வரை இத்தகைய லென்ஸ் உள்ள பலகைகளால் மின்சாரத்தை அதிகமாக தயாரிக்க முடியும்.கவிழ்த்தப்பட்ட பிரமிடு வடிவில் உள்ள இந்த லென்சிற்கு, 'அஜைல்' லென்ஸ் என்று பெயர். இதில் பல அடுக்கு கண்ணாடிகள் உள்ளன. மேல் அடுக்கு கண்ணாடி, சிதறலான, மங்கலான ஒளியை கீழ் அடுக்கை நோக்கி அனுப்புகிறது.அடுத்தடுத்துள்ள அடுக்குகள், உள் வரும் ஒளிக் கதிரை சிறிது சிறிதாக 'வளைத்து' கடைசியில், அக்கதிரை சக்திவாய்ந்ததாக மாற்றி குவியப்படுத்துகிறது.அப்படி குவிந்த ஒளி, மின்சாரம் தயாரிக்கும் சூரிய செல்கள் மீது படுகிறது. இதனால், அதிக மின்சாரத்தை செல்களால் உற்பத்தி செய்ய முடியும்.


No comments:

Post a Comment