முதியோர் - மாற்றுத் திறனாளிகளின் ரயில் கட்டண சலுகைகளை ரத்து செய்தது ஏன்? மக்களவையில் டி.எம்.கதிர்ஆனந்த் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

முதியோர் - மாற்றுத் திறனாளிகளின் ரயில் கட்டண சலுகைகளை ரத்து செய்தது ஏன்? மக்களவையில் டி.எம்.கதிர்ஆனந்த்

 புதுடில்லி, செப். 20 - இந்திய ரயில்வே நிர்வாகம் வழக்கமான ரயில் சேவைகளை 100 விழுக் காடு மீட்டெடுக்கவும், சிறப்பு ரயில்களில் கட்ட ணத்தை குறைக்கவும், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் கட்டணச் சலுகைகளை உடனடியாக வழங்கவும் ஒன் றிய அரசிடம் வேலூர் நாடா ளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மக்களவையில் விதி எண் 377 கீழ் வலியுறுத்தி யுள்ளார். 

இது தொடர்பாக அவர் குறிப்பிட்டதாவது. 

இரயில்வே என்பது நமது நாட்டு மக்களின் உயிர்நாடி ஆகும். குறிப்பாக ஏழை எளிய மக்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள், நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் பயணத் திற்கு இரயில் சேவையையே அதிகம் நம்பியுள்ளனர். மார்ச் 2020 முதல் நாடு தழுவிய கோவிட் 19 முழு அடைப்புக்கு பின்னர், ரயில்வே நிர்வாகம் இந்த ரயில் கட்டணச் சலுகை களை ஒட்டுமொத்த மாக ரத்து செய்தது. 

பயணக்கட்டணம்

மூத்த குடி மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் கட்டணச் சலுகையை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது ஏற்புடையது அல்ல. போராட்ட வீரர்களுக்கும் ரூ.100 சலுகைகள் வழங்கப் பட்டன. ஒன்றிய அரசு முழு அடைப்பை திரும்பப் பெற்று ஓராண்டு ஆகியும் ரயில் சேவைகள் இன்னமும் முழு மையாக சீரமைக்கப் பட வில்லை. மேலும் ஏழைப் பொது மக்களுக்கு துயரங் களைச் சேர்க்கும் வகையில் ரூ.70 ரயில்களை அதிகக் கட்ட ணத்துடன் சிறப்பு ரயில்களாக அரசு இயக்குகிறது. இதனால் ஏழைப் பயணிகள் குறைந்த தூரம் ரயிலில் பயணம் செய்யக் கூட அதிக பணம் செல வழிக்க வேண்டியுள்ளது. இந்த கட்டணச் சலுகையை மீண்டும் அமல்படுத்த ஒன்றிய அரசு துளியும் கவலைப்படவில்லை. இதனால் முதியோர்களும், உடல் ஊனமுற்றோரும் கடு மை யாகப் பாதிக்கப்பட்டுள் ளனர்.   மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள், புற்று நோய் நோயாளிகள், பத்திரிகை யாளர்கள் என 53 வகையினர் களுக்கு இந்திய ரயில்வே நிர்வாகம் பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கி வந்தது. 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக் கும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் முறையே ரூ.50 மற்றும் ரூ.40 சலுகைகள் வழங்கப் பட்டன.   இந்நிலையில் ரயில் சேவையை தனியாரிடம் ஒப் படைக்க ரயில்வே நிர்வாகம் ஆர்வமாக உள்ளது, அதிக முனைப்பு காட்டுகிறது. இத னால் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது ஏழை எளிய சாமானிய மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் சொல்லொண்ணா துய ரத்தை ஏற்படுத்துகிறது. என வே, ரயில்வே நிர்வாகம் வழக்க மான ரயில் சேவைகளை  மீட் டெடுக்கவும், சிறப்பு ரயில்களில் கட்டணத்தை குறைக்கவும், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் கட் டணச் சலுகைகளை உடனடி யாக வழங்கவும் ஒன்றிய அர சிடம் வலியுறுத்துகிறேன். 

-இவ்வாறு டி.எம்.கதிர் ஆனந்த் வலியுறுத்தினார். 

No comments:

Post a Comment