‘விடுதலை’யின் வீரவரலாற்றை அறிவோம்! ‘விடுதலை’ மூலம் நமக்கு நாமே அரணமைப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

‘விடுதலை’யின் வீரவரலாற்றை அறிவோம்! ‘விடுதலை’ மூலம் நமக்கு நாமே அரணமைப்போம்!

தந்தை பெரியாரின் ரத்தத்தில் வளர்ந்த ஏடு விடுதலை! 

நாளிதழாகப் பரிணமிக்கும் போதே போர்க்களத்தைச் சந்தித்து வெளியான ஏடு என்றால், அது விடுதலையைத் தவிர வேறொன்று இருக்க முடியாது.

ஆம்! 1937 ஆம் ஆண்டு நாளோடாக மாற்றமடைந்து, முதல் இதழ் வருவதற்கு முன்பே ஜாமீன் தொகையாக ரூ1000/- செலுத்தப்பட்டே வெளியானது.

அதன் பின் விடுதலை கண்ட களங்கள் எத்தனையெத்தனை?

கருத்துரிமைப் போரில் அது பெற்ற விழுப்புண்கள் எத்தனை?

அனைத்தையும் தாங்கித் தமிழர்க்கு வாழ்வளித்து வலம் வருகிறது.

தமிழர் முன்னேற்றத்தைத் தடுத்து, தம் இன முன்னேற்றத்திற்கு என்றும் பாடுபடும் பார்ப்பனர்களின் கேடயங்களாகவும் ஆயுதங்களாகவும் ஏராளமான பத்திரி கைகள் இருந்த காலத்தில், தன்னந்தனியா கப் போராடி களத்தில் நின்றது விடுதலை!

தொடங்கப்பட்டு ஓராண்டு முடிவதற் குள் ஒரு மாபெரும் அவலத்தைக் கண் டித்து வெளியில் கொண்டுவர வேண்டி யிருந்தது. 1938 இல் நீடாமங்கலத்தில் நடை பெற்ற ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு, சமபந்தியில் அமர்ந்ததற்காக, ஆதி திரா விடத் தோழர்கள் மூவர் தாக்கப்பட்டு மொட்டையடிக்கப்பட்டார்கள் என்ற செய்தியைப் படிக்கும் போது, நம் நெஞ்சம் தாக்குதலுக்கு உள்ளாகிறது என்றால், அந்தச் செய்தியை வெளியில் கொண்டு வந்ததற் காக விடுதலை பட்ட துன்பம் ஏராளம். 

அன்று பார்ப்பனர் நடத்திய ஏடுகளும், அவர்களின் அடிமைகள் நடத்திய ஏடுகளுமே பத்திரிகை உலகம்! அவர்கள் சொல்வதுதான் செய்தி; எழுதுவதுதான் வரலாறு! இந்த நிலையில்தான் உண்மை யைக் கொண்டுவர விடுதலை ஓயாது உழைத்தது.

வழக்குத் தொடுக்கப்பட்டு அதன் ஆசிரியர் பண்டிதர் முத்துசாமி பிள்ளைக் கும், பதிப்பாளர் ஈ.வெ.கிருஷ்ணசாமிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஓய்ந்ததா விடுதலை? தொடர்ந்தது தன் பணியை!

இந்தியைத் திணித்துத் தமிழை அழிக்க நினைத்த ஆச்சாரியாரின் ஆட்சியை எதிர்த்து, தமிழர்களைக் களத்திற்குக் கொண்டுவந்து, இந்தி ஆதிக்கத்தை வீழ்த் திய ஏடு விடுதலை!

அதற்காக விடுதலை மீது இராஜ துவே சக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதன் ஆசிரியரும் பதிப்பாளரும் 6 மாதம் சிறைக்குச் சென்றார்கள்.

கட்டப்பட்ட ஜாமீன் பறிமுதல் செய்யப் பட்டு மீண்டும் கட்டுமாறு உத்தரவிடப் பட்டது.

இரண்டாம் உலகப்போரில் ஆரிய இனத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் போராடிக் கொண்டிருந்த ஹிட்லர் வெற்றி முகட்டில் நின்ற நிலையில், ஆரிய ஆதிக் கத்தைத் தடுக்க, பிரிட்டன் பக்கம் நிற்க வேண்டிய நிலையில் இருந்தார் தந்தை பெரியார். போர்ப் பிரச்சாரத்திற்கு விடு தலையை வழங்கினார். புது விடுதலை போர்ப் பிரச்சார ஏடாக வெளிவந்தது.

1948ஆம் ஆண்டு தமிழரின் தன் மானத்திற்குச் சவால் விட்ட புராணங்களை, புரோகித மந்திரங்களை, பார்ப்பனியத்தை எதிர்த்ததற்கு ஜாமீன் ரூ.2000 செலுத்தச் செய்து அதனை பறிமுதல் செய்துவிட்டு மீண்டும் 10,000/- ஜாமீன் செலுத்தச் சொன்னது சுதந்திர(!) அரசாங்கம்.

1956இல் திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஒரு தமிழர், ஆர்.எஸ்.மலையப் பன் அய்.ஏ.எஸ். அவர்களை, பார்ப்பன நீதிபதிகள் இழிவுப்படுத்தி எழுதினார்கள். கொதித்துப் போனார் அய்யா. முகம் தெரியாத அந்த அதிகாரிக்காக நீதிமன்ற அவமதிப்பைச் சந்தித்தது விடுதலை!

1958 இல் வட்டித் தொழிலால் தமிழர் வாழ்வு சிதைத்து போவதைக் கண்டித்து "இளந்தமிழா! புறப்படு போருக்கு" என் னும் தலைப்பில் எழுதிய கட்டுரைக்காக வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட் டது விடுதலை! அதன் ஆசிரியரான அன்னை மணியம்மையார் சிறையில் இருந்ததுடன், அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது!

விடுதலை ஏற்ற விழுப்புண்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

நெருக்கடி நிலையைச் சொல்லவேண் டுமா?

இவ்வளவு துன்பங்களையும் தாங்கிக் கொண்டு செயல்படும் விடுதலை சாதித் தது ஒன்றா? இரண்டா?

கடந்த நூறாண்டுகளில் தமிழரின் வாழ்க்கை மாற்றத்தில் விடுதலையின் உழைப்பை தியாகத்தைக் காண்கிறோம்!

தமிழர் நலனுக்கு எதிராக எந்தவொரு ஆயுதம் வீசப்பட்டாலும், அதை எதிர்த் துத் தடுக்கும் கேடயம் விடுதலை தான்!

இந்திய அரசமைப்புச் சட்டம் வந்த ஓராண்டிற்குள் வகுப்புரிமையை ஒழித்துக் கட்ட அக்கிர(ம)காரக் கும்பல் ஆடிய நிலையில், "கொலை கொலை வகுப் புரிமை கொலை" என்னும் தலைப்பில் விடுதலை தீட்டிய தலையங்கம் தான் பார்ப்பனரல்லாத மக்களிடம் எச்சரிக்கை ஒலியாய் ஒலித்தது. விளைவு இந்திய அரசமைப்புச் சட்டம் முதல் முறையாக திருத்தப்பட்டது. நம் வாழ்வுரிமையும் காக்கப்பட்டது.

அதே சமூக நீதிக்கு மீண்டும் 1979 ஆம் ஆண்டு 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பாணை என்ற ஆபத்து வந்த போது, "பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மற் றொரு பேரிடி" என்று தலைப்பிட்ட தலை யங்கம் பிற்படுத்தப்பட்டோருக்கு கலங் கரை ஒளியாகத் திசைகாட்டியது. அனைத் துக் கட்சியினரும் சிந்தித்தனர். விளைவு சமூகநீதி காக்கப்பட்டது.

இப்படி ஒவ்வொரு துறையிலும் நம் உரிமையைக் காக்கும் கேடயமாகவும், நம் உரிமைப் போருக்கு ஆயுதமாகவும் விளங்குவது விடுதலைதான்.

இந்த விடுதலை ஏடு ஏற்ற விழுப் புண்களையும், அதன் வீரவரலாற்றையும் தொகுத்து விளக்கும் ஆவணமாக தமிழர் தலைவர் ஆசிரியர் புதிய நூலைத் தொகுத்து வழங்கியுள்ளார். 

மேலும் இந்த நூலில் விடுதலையின் எதிர்நீச்சல் என்னும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலை வர் சு.அறிவுக்கரசு ஆகியோர் ஆற்றிய உரைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டில் வெளிவரும் இந்நூலைப் பரப்பி, விடுதலை சந்தா சேர்க்கும் இயக்கத்தை வலுப்படுத்துவோம்!

- வை.கலையரசன்

No comments:

Post a Comment