விடுதலை சந்தா சேகரிப்பு மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

விடுதலை சந்தா சேகரிப்பு மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை

வளரவேண்டியது எது?

பொதுப்புத்தியா? 

கொள்கைப் புத்தியா?

 நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் நடை பெறும் விழாக்களுக்கு, திருமணங் களுக்கு செல்பவர்கள் பொதுவாக சராசரியாக அனைவரும் மணமக் களுக்கு பரிசு, அன்பளிப்பு, நன் கொடைகளை வழங்குவார்கள்.

அதையே பொதுப்புத்தியில் பெருமையாக நினைத்து, பிறரிடம் பேசுவதும் இயல்பாகி போனது. 

ஆனால், பெரியாரியல் கொள் கைகளை ஏற்று  சமத்துவ சமுதா யம் அமைய பகுத்தறிவு, சுயமரி யாதை, மனிதநேயம், சமநீதி, சமுகநீதி கருத்துகளை முழு அர்ப் பணிப்பு உணர்வுடன் ஏற்றுக் கொண்டு ஆசிரியர் தலைமையில் அணிவகுத்து, சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என தொண் டாற்றிட உழைக்கும் தோழர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

எங்கேயும் எந்த சூழ்நிலையிலும் தனது லட்சியத்தை நிறைவேற்ற சிந்திப்பதுதோடு அதற்காகவே உழைக்கும் எண்ணமும் உறுதியும் கொண்டவர்களாக நமது இயக்க தோழர்கள் இருக்கின்றனர்.

கழக தோழர்கள் பலநேரங்களில் தங்கள் உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்களின் குடும்ப விழாக் கள் கோயில், சர்ச், மசூதி, மண்டபம் போன்ற இடங்களில் திருமணங்கள் நடைபெறும் போது தமக்கு உடன் பாடு இல்லாவிட்டாலும் தவிர்க்க முடியாமல் அந்த திருமணங்களுக்கு செல்லும் சூழ்நிலை பலருக்கும் தவிர்க்க முடியாமல் ஏற்படுவதுண்டு.

அது போன்ற நேரங்களில் புதிய இளைஞர்களான மணமக்க ளிடம் தந்தை பெரியாரியல் கொள் கைகளை கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் கழக புத்தகங்களை பரிசாக தொடர்ந்து வழங்கி வருகின்றனர்

அந்த புதிய இளைஞர்களிடம் தந்தை பெரியாரின் தத்துவங்களை இயக்கத்தின் செயல்பாடுகளை அறிமுகம் செய்தாலே அவர்களின் உழைப்பு கொள்கை வளர்ச்சிக்கு, இயக்க ஏடுகளுக்கு, இயக்க வளர்ச் சிக்கு, இயக்க பிரச்சாரத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்கத்திற்காக நன்கொடைகளை சேகரிப்பதில் கண்ணும் கருத்துமாக கவனமாக சிலர் ஈடுபட்டு வருகின் றனர்.

சமீபத்தில் 4/7/2022 திங்கள் கிழமை  லூக்காஸ் பீட்டர் & லிசி லூக்காஸ் ஆகியோரின் மகள்கள் இரட்டை சகோதரிகளான  மண மகள்கள் ஜான்சி, லின்சி ஆகியோர் இரட்டை சகோதரர்களான மணமகன்கள் ஜோயல், ஜெபர்சன் ஆகியோர் ஜான்சி & ஜோயல் மற்றும் லின்சி & ஜெபர்சன் ஆகி யோரின் திருமண நிகழ்வு கேரளா வில் கொல்லம் பகுதியில் உள்ள கடவூர் (ST காஷ்மீர்) சர்ச்-சில் நடைபெற்றது.

தொடர்ந்து அருகே உள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கோவையில் இருந்து நேரில் சென்ற கழக இளைஞரணி மாவட்ட தலைவர் திராவிடமணி, மற்றும் ஜி-டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் & பெரியார் புத்தக நிலையம் பொறுப்பாளர் அ.மு. ராஜா ஆகியோர் மணமக்களுக்கு கழக புத்தகங்களை வழங்கி தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச் சியை பகிர்ந்து கொண்டனர்.

மேடையில் மணமகன்களிடம் திருச்சியில் மிக சிறப்பாக நடை பெறுகிற நாகம்மையார் குழந்தை கள் இல்லம் குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்ட போது மேடையிலேயே உடனடியாக மணமக் களின் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 3000 நன்கொடை வழங்கி தங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

தோழர் லூக்காஸ் பீட்டர் & லிசி லூக்காஸ் ஆகியோர் தமது பங்களிப்பாக ஆசிரியர் 60 ஆயிரம் விடுதலை சந்தா சேகரிப்பு பணிக்கு ஓராண்டு சந்தா ரூபாய் 2000 நன் கொடை வழங்கி ஆசிரியர் அவர்க ளுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

திராவிடம் வெல்லும் என்று எங்கள் ஆசிரியர் அன்று கூறியது எவ்வளவு ஆழமானது அவர் தலை மையில் பணியாற்றுவது எங்க ளுக்கு பெரும் மகிழ்ச்சியானது.

இது சொல்... அல்ல செயல்!!

No comments:

Post a Comment