அறிவியல் செய்திகள் - சிலவரிகளில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

அறிவியல் செய்திகள் - சிலவரிகளில்

தடுப்பூசி தடுத்த மரணங்கள்

கடந்த 2021இல் நேரவிருந்த 2 கோடி கரோனா தொற்று மரணங்களை, தடுப்பூசிகள் தடுத்திருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 

அதேபோல, கோவிட் தடுப்பூசிகள் இன்னும் சிறப்பாக விநியோகம் செய்யப்பட்டிருந்தால், மேலும் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் எனவும் அந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட, கணித மாதிரி ஆய்வின் அடிப்படையில் இந்த இரு தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. தடுப்பூசிகளால் கிடைத்த மருத்துவ வெற்றி இது.

ஆயுளுக்கு பாதுகாப்பு

நீண்ட காலம் உயிர் வாழக்கூடிய விலங்கினங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அப்போது ஆச்சரியகரமான உண்மை தெரிய வந்தது. பாதுகாப்பாக மறைந்துகொள்வதற்கு ஓடு, எதிரிகளை கடித்துக் கொல்வதற்கு விஷப் பல் போன்ற உறுப்புகளைக் கொண்ட விலங்குகள்தான் நீண்ட ஆயுளுடன் இருக்கின்றன. அல்லது உடல் ரீதியாக மூப்படைவது அந்த விலங்குகளுக்கு மிக மெதுவாக நிகழ்கிறது. 

அமெரிக்காவிலுள்ள பென் ஸ்டேட் மற்றும் இல்லினாய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

காற்றில் வரும் வேதியல் சேதி!

விலங்குகள் உடலிலிருந்து மரபணுத் துகள்கள் காற்றில் மிதப்பதுண்டு. இதை என்விரோன்மென்டல் டி.என்.ஏ., என்பர். இதை சேமித்து ஆராய்வதுதான் சுழல் மரபணு அலசல். 

இந்த முறைப்படி அண்மையில் ஜூரிச்சிலுள்ள ஈ.டி.ஏச் மய்யத்தின் ஆராய்ச்சியாளர்கள், கடல் பகுதிக் காற்றில் மரபணுக்களை சேகரித்து ஆராயந்தனர். அதன்படி, 40 ஆயிரம் கடல் சார் உயிரினங்களின் டி.என்.ஏக்கள் காற்றிலிருந்து சேமிக்கப்பட்டன. அவை அனைத்துமே, வர்த்தக ரீதியில் கிடைக்கும் வேதிப் பொருட்களை தயாரிக்கும் திறன்படைத்தவை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

வளர்ச்சியை சிதைக்க வழி

அமெரிக்காவின் மாசாசூசெட் தொழில்நுட்ப நிலைய ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை அறிய, செயற்கை நுண்ணறிவின் ஒரு பிரிவான இயந்திர கற்றல் மென்பொருளை பயன்படுத்தலாம் என்கின்றனர். புற்று நோய் செல்களில், சில செல்களே வளர்சிதை மாற்றமடைந்து, கட்டி வளரக் காரணமாகின்றன. 

எனவே, புற்று நோய் ஏற்பட்டுள்ள பகுதியிலிருந்து செல்களை எடுத்து, இயந்திர கற்றல் மூலம் ஆராய்ந்தால், எந்த செல் வளர்கிறது என்று கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment