சிறந்த பொறியியல் மாணவர்களுக்கு விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

சிறந்த பொறியியல் மாணவர்களுக்கு விருது

சென்னை, ஜூலை 8  சிமாட்ஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங்கில் நடைபெற்ற சிறந்த மாணவர் விருது வழங்கும் விழாவின் போது பொறியியல் கல்வியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். 

விழாவின் முதன்மை விருந்தினராக சென்னை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இராணுவ வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானி மற்றும் திட்ட இயக்குநர் டாக்டர். எஸ். நாகேஷ் கலந்துகொண்டு பேசுகையில்,

இன்றைய தொழில்துறை, நிறுவன தலைவர்கள் 

பொறியியல் பட்டதாரிகளிடம் எதிர்பார்க்கும் முக்கிய கூறுகள் பற்றிய தெளிவான விளக்கத்தை வழங்கினார். அவரது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தி, பல்வேறு  நிகழ்வுகளுடனும், புள்ளி விவரங்களுடனும் உரையாற்றினார்.  சிமாட்ஸ் நிறுவனர் டாக்டர் என்.எம்.வீரய்யன் அவர்கள் விழாவிற்கு தலைமை வகித்து விழாவில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களின் சாதனைகள் மற்றும் முன்முயற்சிகளை பெரிதும் பாராட்டினார்.


No comments:

Post a Comment