முறையாக நியமிக்கப்படாத ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்யக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

முறையாக நியமிக்கப்படாத ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்யக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 8 பின்வாசல் வழியாக அரசுப் பணியில் சேரு பவர்களை, எந்தச் சூழலிலும் பணி வரன்முறை செய்யக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர் களாகப் பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கடந்த 2007இல் அர சாணை பிறப்பிக்கப்பட்டது.

அந்த அரசாணையின்படி, நீண்டகாலமாக தற்காலிக ஆசிரி யர்களாகப் பணிபுரிந்து வரும் தங்களை, பணி நிரந்தரம் செய்யக் கோரி பெற்றோர்-ஆசிரியர் சங்கங் களின் மூலமாக நியமிக்கப்பட்ட கோவிந்தராசு, திவ்யா உள்ளிட்ட 4 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘‘மனுதாரர் கள் தகுதிபெற்ற கல்வித் துறை அதிகாரிகளால் நியமிக்கப் படாமல், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் மூலமாக, உரிய தேர்வு நடை முறைகளைப் பின் பற்றாமல் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக ஆசிரியர்களாக நீண்டகாலம் பணி யாற்றியுள்ளோம் என்பதற்காக, பணி நிரந்தரம்செய்யக் கோர முடியாது. முறையாக நியமிக் கப்படாதவர்களுக்கு பணி நியமன சலுகை வழங்கினால், உரிய தகுதி யுடன் அரசுவேலைக்காகக் காத்தி ருப்பவர்களின் அடிப்படை உரி மைகள் பாதிக்கப்படும்.

அரசுப் பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் உரிய தேர்வு விதிகளைப் பின்பற்றியே நடத்தப்பட வேண்டும். பின்வாசல் வழியாக அரசுப் பணியில் சேருபவர் களின் பணி நியமனங்களை, எந்தச் சூழலிலும் பணிவரன்முறைப் படுத்தக்  கூடாது. அவர்களை வந்த வாசல் வழியாகவே திருப்பி அனுப்ப வேண்டும். அதேநேரம், மனுதாரர் களை தொடர்ந்து பணியில் வைத் திருக்க பெற்றோர்-ஆசிரியர் சங்கங் களுக்கு எந்த தடையும் இல்லை" என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment