இலங்கையை மீண்டும் கட்டி எழுப்ப முன்வருபவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

இலங்கையை மீண்டும் கட்டி எழுப்ப முன்வருபவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

இலங்கையின் தலைநகர் கொழும்பு தெருக்களில் மக்கள் கோபம் வெடித்தது மற்றும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இல்லத்தை முற்றுகையிட்ட நிலையில், இலங்கை அரசியல் மற்றும் இராணுவத் தலைமை நெருக்கடியை எவ்வாறு கையாளுகிறது என்பதைக் கண்காணிக்க இலங்கையின் அண்டை நாடுகள் முடிவு செய்தன.

கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கள நிலைமையை கவனித்து வருகின்றனர். இந்திய தூதரகம் அதிபரின் இல்லத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மே மாதம் மஹிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார் இது ராஜபக்சேக்களின் அதிகார முடிவின் ஆரம்பம். இறுதியாக அதிபர் கோத்தபயவின் அதிபரின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தது  கோபத்தின் வெளிப்பாடு என்றும் இலங்கை ஊடகவியலாளர்கள்  தெரிவித்தனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக  இலங்கையில் அரசாங்கத்தில்  குழப்பமான நிலை உருவானது.

 நிதி நெருக்கடி மற்றும் அதிகாரப்பதவியில் அமர்ந்தவர்களின் ஊழல்கள் இலங்கையை முடக்கிவிட்டதாகவும், அரசியல் வட்டாரத்தில் யாரும் தலைமை ஏற்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர். “இது குறுகிய காலத்தில் தீர்க்க முடியாத நெருக்கடி என்பதை அவர்கள் அனைவரும் அறிவார்கள், மேலும் ராஜபக்சேக்களால் உருவாக்கப்பட்ட நிதிக் குழப்பத்திற்கும் யாருமே பொறுப்பேற்க முன்வரமாட்டார்கள் என்று ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் ஒன்றிய ஆட்சியாளர் களுக்கு  கொழும்புவின் தெருக்களில் மக்கள் போராட்டம் மற்றும் அரசியல் தலைமையின் தப்பி ஓட்டம் போன்றவை ஒரு எச்சரிக்கையை கொடுத்திருக்கவேண்டும் 

இலங்கையின் அண்டை நாடு மற்றும் முதல் உதவுபவர் என்ற வகையில், இந்தியாவின் சமீபத்திய பொருளாதார உதவி 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

கோத்தபய ராஜபக்சே மற்றும் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கைத் தலைமையைச் சந்திக்க, வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா தலைமையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் உட்பட நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய இந்தியக் குழுவை, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா அனுப்பியது. முதலீடுகளை ஊக்குவித்தல், இணைப்பு மற்றும் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இலங்கைக்கு விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக குழு தெரிவித்தது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் பன்னாட்டு நாணய நிதியத்தில் நடைபெற்ற கூட்டங்களின் போதும், பிராந்திய மற்றும் பன்முக அமைப்புக்கள் உட்பட பல்வேறு அரங்குகளிலும் இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்தது.

இலங்கை மக்களுக்கு 3.5 பில்லியனுக்கும் அதிகமான பொருளாதார, நிதி மற்றும் மனிதாபிமான உதவியானது அதன் வெளிநாட்டு கொள்கை மற்றும் ‘இந்தியாவிற்கு அருகில் உள்ள நாட்டுமக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை முக்கிய நோக்கமாக கொண்டு வழங்கப்பட்டது என்று இந்தியா கூறியது. 

இந்தியா அரசியல் தலைமையுடன் பேசி வரும் அதே வேளையில், அது இலங்கை மக்களுக்காக பாடுபடுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்த முயன்று வருகிறது. 

இது ராஜபக்ச குடும்பத்தையோ அல்லது குறிப்பிட்ட அரசியல் தலைவரையோ ஆதரிக்கவில்லை என்றும் ஒருபுறம் அம்மக்களுக்கு செய்தியாக சொல்லுகிறது

இது போன்ற ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையில் இந்தியாவின் அயலுறவுத்துறை அந்நாட்டு அரசியலில் தலையிட விரும்பவில்லை, அதே நேரத்தில் அங்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தைக் கட்டுப்படுத்த விரும்புகிறது, இதனால் “இலங்கையிலும் அதன் அருகில் உள்ள நாடான இந்தியாவிலும் இணக்கமான சூழல் இருக்கும்.

அரசியல், ராணுவம் மற்றும் சிவில் சமூகத் துறைகளில் நெருக்கடியிலிருந்து வெளிவர அங்கு பொறுப்பை ஏற்று மீண்டும் பழைய இலங்கையை திரும்பக் கொண்டுவருவது யார் என்பதைப் பார்ப்பதுதான் இந்தியாவுக்கு இப்போது முக்கியமானது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகளில் இதே போன்ற சிக்கல்கள் வந்த போது அதிகார வெற்றிடம் உருவாகி அது அடிப்படைவாத மற்றும் தீவிரவாத தலைவர்களின் கைகளுக்குச் சென்று விட்டது. எடுத்துக்காட்டாக ஆப்கானிஸ்தானை நாம் கூறலாம். இலங்கையிலும் அதே போன்ற ஒரு சூழ்நிலை உருவாகிவிடக்கூடாது என்று இந்தியா மிகவும் எச்சரிக்கையாக உள்ளது.

இலங்கையின் உள்விவகாரங்கள் குறித்து இந்தியா தலையிடாது என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. அதற்கேற்றாற்போல் அதிபர் மாளிகைத்தாக்குதல் மற்றும் பிரதமர் இல்லம் தீவைப்பு போன்ற நிகழ்வுகள் இந்திய தூதரகத்தின் மிக அருகில் நடந்த போதும் இந்திய தூதரகம்  கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

 ஆனால் இதை இப்படியே விட்டுவிட முடியாது, இந்தியப் பெருங்கடலின் அதிமுக்கிய வணிகப்பாதையில் அமைந்திருக்கும் இலங்கை அதன் தலைநகர் கொழும்பு அமைதி மற்றும் உறுதியான அதே நேரத்தில் விரைவாக முடிவுகளை எடுத்து இலங்கையை மீண்டும் மேலே கொண்டுவருவது அங்குள்ள அரசியல் தலைவர்களின் தலையாய கடமை ஆகும். 

No comments:

Post a Comment