சுவீடன் தோழரின் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

சுவீடன் தோழரின் பதிவு

நேற்று (23.7.2022) அன்பகத்தில் அண்ணன் பேராசிரியர் Pitchaimuthu Sudhagar  ஏற்புரை வழங்கிய பொழுது  “ஆசிரியர் அவர்களின் பெயருக்கு முன்னொட்டாக மானமிகு என சொல்வது பற்றி யோசித்து வியந்திருக்கிறேன். உலகிலேயே Self Respect என்பதை ஒரு salutation ஆக கொடுத்தவர்கள் திராவிட இயக்கம் தான்” என்றார்.

மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுதாகர் அண்ணனுக்கு பயனாடை போர்த்தி கவுரவிக்கும்பொழுது, ஆசிரியர் அதை தன் தோளை சுற்றி அணிவிக்க ஏதுவாக ஆய்வாளர் சுதாகர் குனிந்ததும், ஆசிரியர் அவர் தோளை தொட்டு நிமிர்ந்து நிற்கச் சொல்லி, பின்னர் பயனாடையை அணிவித்தார்.

சுயமரியாதையை  இம்மண்ணில் நூறாண்டுகளாக கற்பித்து கடைப்பிடிக்க வைக்கும் திராவிட இயக்கத்தின் சிறப்பை நேரில் கண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. 

பி.கு.: “பொன்னாடை அல்ல பயனாடை, அதை நாம் பயன்படுத்துவோம்” என விளக்கமளித்தார் மானமிகு ஆசிரியர் அவர்கள்.

- சுவீடன் தோழரின் பதிவு


No comments:

Post a Comment